புகழ்பெற்ற தொழிலதிபரும், வன்னியர் சங்க முன்னோடியுமான பெரியவர் டெல்டா நாராயணசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல். - Agnipuratchi

புகழ்பெற்ற தொழிலதிபரும், வன்னியர் சங்க முன்னோடியுமான பெரியவர் டெல்டா நாராயணசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்.

Share This

புகழ்பெற்ற தொழிலதிபரும், வன்னியர் சங்க முன்னோடியுமான பெரியவர் டெல்டா நாராயணசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்.

பெரியவர் டெல்டா நாராயணசாமி அவர்கள் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களில் நாற்பதாண்டு கால நண்பர். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் அன்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். இன்றைய தலைமுறைக்கு அவர் ஒரு முன்னுதாரணம். அரியலூர் மாவட்டம் சோழன் குடிகாடு என்ற கிராமத்தில்  சாதாரண குடும்பத்தில் பிறந்த டெல்டா நாராயணசாமி அவர்கள் பொறியியல் பட்டம் பெற்று, சுயதொழில் தொடங்கி தொழிலதிபராக உயர்ந்தார். பாடுபட்ட சேர்த்த செல்வம் தமக்கு மட்டுமின்றி தேவைப்படும் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக தாராளமாக உதவி செய்தார். தாம் பிறந்த மண்ணுடனான உறவை மறக்காத அவர், அந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார். தாம் பிறந்த ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தை தமது சொந்த செலவில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியவர். பல மாணவர்களுக்கு உயர்கல்வியை உறுதி செய்தவர்.

வன்னியர் சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற வேண்டும் என்ற தாகம் கொண்டிருந்தவர். அதற்காக மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் துணை நின்றவர். அவர் இல்லாமல் எங்கள் வீட்டில் எந்த நிகழ்வும் நடந்ததில்லை... அதே போல் மருத்துவர் அய்யா அவர்கள் இல்லாமல் அவர் இல்லத்தில் எந்த நிகழ்வும் நடந்ததில்லை. அண்மையில் கூட மருத்துவர் அய்யா அவர்களின் முத்துவிழா அவர் முன்னிலையில் தான் கொண்டாடப்பட்டது. அந்த அளவுக்கு அவரும், மருத்துவர் அய்யாவும் நட்பின் இலக்கணமாக திகழ்ந்தனர். டெல்டா நாராயணசாமி அவர்களை இழந்ததன் மூலம் எங்கள் குடும்பத்தின் மூத்த உறவை இழந்து விட்டோம். இது பாட்டாளிகளுக்கு தாங்க முடியாத பேரிழப்பாகும்.

பெரியவர் டெல்டா நாராயணசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages