அக்னிப்புரட்சி இன்றைய (26.05.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.95.06 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.89.11 க்கும் விற்பனை.
* இன்று சூப்பர் பிளட் மூன் உடன் நிகழும் முழு சந்திர கிரகணம்.
இந்தியாவில் இன்று மாலை 3.15 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.23 மணிக்கு முடியும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி ரத்த நிலா என்கிற அரிய நிகழ்வு இன்று வானில் தோன்றும்.
முழுமையான சந்திர கிரகணத்தின் போது நிலவு கூடுதல் ஒளியுடன் ரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும். இதனால் இதனை ரத்த நிலா என அழைக்கிறார்கள்.
இந்தியாவை பொருத்தவரை தமிழகத்தில் ரத்த நிலாவை காண முடியாது. சில நிமிடங்கள் மட்டுமே இந்த கண்கொள்ளா காட்சியை காண முடியும்.
* 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்.
விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 6 மாதங்களாகின்றன- ஸ்டாலின்.
* ஒடிசா - மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது.
புயல் முழுவதும் கரையை கடக்க சுமார் 4 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
* தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை
* நாமக்கல் நகராட்சியில் பகுதி வாரியாக காய்கறிகள் விற்பனை செய்யும் ஊர்தி மற்றும் வியாபாரிகள் விவரம் & தொலைபேசி எண்கள் பட்டியல்
நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய நாளை நேர்காணல் - மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் அறிவிப்பு
* தலைமைச் செயலகத்தில் இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு - தலைமைச் செயலாளர்
💥சூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்ட பகுதிகளில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க மூத்த குடிமைப் பணியில் அலுவலர்கள் நியமனம்
* புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்றார்.
புதுவை தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணனுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
* காஞ்சிபுரம் மாவட்டம் ஒரக்கடம் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
தீவிர ஊரடங்கால் பலன் கிடைக்க தொடங்கி உள்ளது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போதுமான படுக்கைகள் மருத்துவமனையில் தயாராக உள்ளது.
இன்னும் 2-3 நாட்களில் முழுமையான பலன் தெரியும் - ஸ்டாலின்.
💥 பிரசவத்திற்கு முன் பாலினத்தை அறிதல்: பொது அறிவிப்பு!
💥புதுச்சேரியில் கொரோனா இழப்பீடாக குடும்ப அட்டைக்கு ₹3000 வழங்க முதல்வர் N ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹3000 கொரோனா நிவாரணமாக அளிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல்.
💥 கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையாக ரூ.5000 வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
💥 மத்திய அரசிடம் பேசி, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவே தமிழகத்திற்கு தடுப்பூசி தன்னிறைவை வழங்கும்.
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து - தமிழக அரசு.
சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட வழக்குகளை தவிர 38 வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் உத்தரவு- தமிழக அரசு.
💥தமிழக அரசின் கைத்தறித்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமனம்
* 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் ₹1000 கோடி கேட்டு அவதூறு வழக்கு பதியப்படும் என யோகா குரு பாபா ராம்தேவ்வுக்கு உத்திரகாண்ட் இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை
* 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள்& 14 நலவாரியங்களை சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள், உணவுத்தொகுப்பு மற்றும் ₹ 2000 இழப்பீடு உதவியை அரசு உடனே வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
* மதுரை மாவட்ட மக்களுக்கு:
காமராஜர் சாலை மற்றும், மடீட்சியா அரங்கத்தில் மே 27,28,29 ஆகிய மூன்று தேதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது
* பொது விநியோக திட்டத்திற்காக பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்கால தடை-உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
டெண்டரில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என வழக்கு.
கொரோனா தொற்று காலத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அவசர கால டெண்டர் விடப்பட்டது - தமிழக அரசு.
* தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது:
கைத்தறித்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சித்துறையில் முதன்மை செயலராக இருந்த மங்கத் ராம் சர்மா, நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மையின் முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
சிறுதொழில் நிறுவனங்களுக்கான இயக்குனர் மற்றும் செயலராக இருந்த விபுநாயர், நிலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து துறை இயக்குனராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனராக இருந்த சிகி தாமஸ் வைத்யன், கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சில துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
நிதித்துறையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக துயர்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியார் வங்கியின் தலைவர்களுடன் RBI ஆளுநர் கலந்தாய்வு
💥கன்னியாகுமரியில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு. பலத்த காற்று பரவலாக சேதத்தை உண்டாக்கியுள்ளது!
வெள்ள நீர் தேங்கிய இடங்களை காங்கிரசு மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.
நாகர்கோவிலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் MR காந்தி பார்வையிட்டனர்.
* கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியான மழை பெய்து கொண்டிருக்கிறது அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மழையினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து உடனடியாக போக்க அரசு அலுவலர்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
- அமைச்சர் KKSSR இராமச்சந்திரன்
* பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை.
ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளின் நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவுகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இருவர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். - தமிழக அரசு
💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 33,785 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
475 பேர் உயிரிழந்து உள்ளனர்.
29,745 பேர் குணமடைந்து உள்ளனர்.
No comments:
Post a Comment