அக்னிப்புரட்சி இன்றைய (27.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (27.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (27.05.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து லிட்டர் 95.28 ரூபாய்க்கும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து லிட்டர் 89.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* விவசாய பணிகளுக்காக உரம், விதை மற்றும் பூச்சிக்கொல்லி கடைகள் இன்று முதல் இயங்க அனுமதி.

குறுவை சாகுபடிக்காக தமிழகம் முழுவதும் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கும்.

* தமிழிலும் இனி பொறியியல் பாடங்கள் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி.

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க  அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி.

* தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்வுள்ளார்.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.

தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பு.

* மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம்.

தமிழகத்திடம் ஆலையை ஒப்படைத்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தருமாறு வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

* கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்.

தளர்வுகள் அற்ற ஊரடங்கா? தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கா என்பது பற்றி விரைவில்
அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.

* தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. -உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல்.

"கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் பணிகளில் தமிழக அரசுக்கு உதவியாக செயல்படுகிறோம்"

* தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் திருப்தி.

கொரோனாவில் பலியானவர்களின் முகங்களை உறவினர்கள் பார்க்கும் வகையில் பொதிந்து வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவு.

கொரோனாவில் பலியானவர்களின் முகங்களை உறவினர்கள் பார்க்கும் வகையில் வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* ஸ்புட்னிக் தடுப்பூசி ஜூன் 2வது வாரம் முதல் அனைத்து அப்பல்லோ மருத்துவமனைகளிலும் பயன்பாட்டிற்கு வரும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம். அரசு ஊழியர்கள் அளித்த விருப்பத்தை ஏற்று அரசாணை வெளியீடு.

அரசு உதவி மற்றும் மானியம் பெறும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் இது பொருந்தும்.

தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும்.

* ஆசிரியர் தேர்வாணைய தலைவர் உட்பட தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுதீன் மாற்றப்பட்டு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வாணைய தலைவர் எல் நிர்மல் ராஜ் மாற்றப்பட்டு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்புச் செயலர் வெங்கடேஷ் மாற்றப்பட்டு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சுப்பிரமணியம் மாற்றப்பட்டுள்ளது டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

💥தமிழகத்தில் இன்று மேலும் 33,361 பேருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி.
474 பேர் உயிரிழப்பு
30,063 பேர் மீண்டனர்.

💥 தில்லியில்  ஒரு நாள் கொரோனா வெருவி  பாதிப்பு எண்ணிக்கை 1,072 ஆக குறைந்து விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு  எண்ணிக்கையும் 117 ஆக  குறைந்துள்ளது

💥மேற்கு வங்க மாநிலத்தில் சூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* மே 31 ஆம் தேதி ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு 60 வயது வரை பணி நீட்டிப்பு - சென்னை  மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

*:குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா இழப்பீடு  நிதி வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

* கொரோனா வெருவித் தடுப்பு பணியில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள், தனிநபர்கள்  https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

8754491300  என்ற எண் வாயிலாகவும் tnngocoordination@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாநில ஒருங்கிணைப்புக்குழுவைத் தொடர்பு கொள்ளலாம்

* ஆங்கில மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமாது" என்று கருத்து தெரிவித்த யோகா குரு பாபா  ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தில்லி காவல் துறையில் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது

* மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதாக கருதப்படும் ONV இலக்கிய விருது கவிஞர் வைரமுத்துவிற்கு கிடைத்துள்ளது

கேரளாவின் ONV விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவிற்கு  முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து

💥கவிஞர் வைரமுத்துவுக்கு ONV விருது: மலையாள திரையுலகில் வலுக்கும் கண்டன குரல்!

18 பெண்களால் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்கு ஆளான கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளாவின் ONVAward  வழங்கப்பட்டது குறித்து நடிகர் பார்வதி மற்றும் நெறியாளர் அஞ்சலி மேனன் ஆகியோர்   தனது கடும் எதிர்ப்பை  வெளிப்படுத்தியுள்ளார்.

* சத்தீஸ்கர், ஜார்கண்ட் அரசை தொடர்ந்து பஞ்சாப் மாநில அரசும் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து முதன்மை அமைச்சர் நரேந்திர மோதியின் படத்தை அகற்றியது

தடுப்பூசிக்கு பணம் கொடுப்பது மாநில அரசு,பிறகு எதற்கு முதன்மை அமைச்சரின் படம்? யார் கேட்டாலும் இது தான் பதிலாக  வழங்கப்படும் என பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பதில்

* 4 சிறப்பு தொடர் வண்டிகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தென்னக ரயில் போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

* பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் Me Too  குற்றச்சாட்டுக்கு ஆளான கவிஞர் வைரமுத்துவுக்கு  கேரள கம்யூனிஸ்ட் அரசு விருது வழங்குவது வெட்கத்திற்கு உரியது

:O.N.V. இலக்கிய அகாதமிக்கு இந்து மக்கள் கட்சி கடும்  கண்டனம்

💥கோவை கொரோனா பாதிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட அதிமுக கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள்  வேண்டுதல்!

தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி தலைமையில் , வானதி சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன் உள்ளிட்ட 10 பேர் மாவட்ட ஆட்சியரகம் வந்து கோரிக்கை விடுத்தனர்.

* கன்னியாகுமரி  மாவட்டத்தில் நித்திவிளையில் 25 வீடுகள் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த  வீடுகளில் இருந்தவர்கள் அந்த  பகுதியில் உள்ள  அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க  கோரிக்கை விடுத்துள்ளனர்

* பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அந்த பள்ளி நிர்வாகத்தினரின் சமுதாயத்தை கண்டறிந்து அவர்கள் மீது புழுதி வாரி இறைக்க கூடாது
- அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன்

* அரசு ஊழியர்களுக்கான  பொது வருங்கால வைப்பு நிதி திட்டமான CPS, GPF ஆகியவற்றின்  வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. சூன் 30, 2021 வரை 7.1% என்ற விகிதத்திலேயே வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவிப்பு

💥கொரோனாவெருவித் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது பேரிடர் இழப்பீடு நிதிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள, அரசு பணியாளர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது

* தன்னலமற்ற சேவை புரிந்து வரும் மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்து  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி கடிதம்! கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சி எடுத்து வரும் முன்னெடுப்பில் கொரோனா வெருவித் தொற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது

* கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை;

3 மாவட்டங்களையும் கண்காணிப்பதற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்.

கோவைக்கு வணிக வரித்துறை செயலாளர் சித்திக் நியமனம்.

திருப்பூருக்கு வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி நியமனம்.

ஈரோட்டிற்கு நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குநர் செல்வராஜ் நியமனம்.

* மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சர்க்கரை உற்பத்தி துறை ஆணையர்/கூடுதல் தலைமை செயலாளராக ஹர்மந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages