அக்னிப்புரட்சி இன்றைய (29.05.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து லிட்டர் 95.51 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டர் 89.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* அக்னி நட்சத்திரம் என்ற, கத்திரி வெயில் காலம் இன்று முடிகிறது.
இந்த மாதம், 4ம் தேதி கத்திரி வெயில் துவங்கியது. அக்னி நட்சத்திர காலத்தில், பல மாவட்டங்களில், கோடை மழை கொட்டியது.
* கோவை வருகையின்போது எனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விடுத்து பசியினை போக்கும் உன்னத பணியில் ஈடுபட வேண்டும்!" - முதல்வர் ஸ்டாலின்
💥கொரோனோ மருத்துவ கருவிகள், கரும்பூஞ்சை மருந்துக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுவதாக நிதி அமைச்சகம் அறிவிப்பு!
எனினும் கொரோனா வெருவித் தடுப்பூசிக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
💥முன்னாள் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் மு அனந்தகிருஷ்ணன் காலமானார்!
பொறியியல் மாணவர்களே பேரா. அனந்தகிருஷ்ணன் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
1928 இல் வாணியம்பாடியில் பிறந்த இவர் குடிமைப் பொறியியல் துறையில் பட்டம் பெற்று மாபெரும் கள்வியாளராய் உருவெடுத்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துனை வேந்தராகவும், கான்பூர் IIT யின் தலைவராகவும் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்.
கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வர காரணமாய் அமைந்தவர்.
இவருடைய தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில் தான் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு முறை நீக்கப்பட்டது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிதாக்கிய ஒற்றைச் சாளர முறை நடைமுறைக்குக் காரணமானவர்.
கணினியிலும், இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதில் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றவர்.
தமிழ் வழியில் பொறியியல் படிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு இவருடையது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டம் அமைக்கப்பட்டதிலும் இவருடைய பணி உள்ளது.
இவர் அடங்கிய குழு நாடு முழுவதும் உள்ள முறையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் இதர வசதிகள் இல்லாத 44 நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை நீக்கம் செய்தது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் தர்கர்களின் உள்ளீடு ஆகியவற்றை வெளியே அம்பலப்படுத்தினார்.
பணி ஓய்வுக்கு பிறகு எந்தவொரு தனியார் கல்வி நிறுவனத்திலும் எந்தவொரு பதிவியையும் ஏற்க மறுத்தவர். ஜேப்பியார் அவர்கள் இவரது வீடு தேடி சென்று சந்தித்து கோரிக்கை விடுத்தும் ஏற்க மறுத்தார்.
மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். கார் ( car) கூட இல்லாத மனிதர். இவருக்கு 2002 இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹112 உயர்ந்து சவரன் ₹36,888-க்கும், ஒரு கிராம் ₹4,611-க்கும் விற்பனை!
💥43வது சரக்கு மற்றும் சேவை வரி மன்ற கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்!
உலக அளவில் அதிகரித்துவரும் அதிகாரப் பகிர்வின் அனுபவத்திலிருந்து வேறுபட்ட நிலையில், இந்தியா எதிர்திசையில் சென்றுள்ளது. அதாவது, நடுவண் அரசாங்கத்திடம் அதிகாரங்கள் அதிக அளவில் குவிந்தது.
உண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், நம் அரசியலமைப்பில் ஒருபோதும் கற்பனை செய்யப்படாத அளவிற்கு, நடுவண் அரசாங்கத்திடம் அதிகாரங்கள் குவிந்துள்ளது.
கடுமையான கவலைகள் இருந்தபோதிலும், பல மாநிலங்கள் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான், சரக்கு மற்றும் சேவை வரியை செயல்படுத்தினர்.
முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி அவர்கள், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நீண்டகாலம் இருந்த பொழுது, மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் கூட்டாட்சிக்காகவும் உறுதியாகப் போராடியது போல், பாரத நாட்டின் தலைமை அமைச்சராகவும் அவ்வாறே தொடர்ந்து செயல்படுவார் என்பது தான் அந்த நம்பிக்கையின் முதன்மையான காரணம்.
மிகவும் முதன்மையானது என்னவென்றால், ஒன்றிய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவின் நம்பிக்கையில் சீர்குலைவு ஏற்படுவது ஆகும். ஒன்றிய அரசால் பெறப்படும் வரிகளில் மாநிலங்களின் பங்கு கணிசமாகக் குறைந்தமை, மாநில அரசின் வரிவிதிக்கும் மற்றும் வருவாய் ஈட்டும் அதிகாரத்தின் மீதான அணுகுமுறையில் ஒன்றிய அரசின் “நன்னம்பிக்கை இல்லாமை”, குறிப்பாக கொரோனா தொற்றுத் தேக்கம் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை சமரசம் செய்வதில், கருணையின்மை மற்றும் பரிவின்மை கொண்ட ஒன்றிய அரசின் அணுகுமுறை, ஆகியவற்றினால் இந்த சீரழிவு ஏற்பட்டுள்ளது.
மொத்தமாக, அரசியலமைப்பிலும் வரலாற்றிலும் காணாத ஒரு வித்தியாசமான நிலைக்கு நாம் வந்துள்ளோம். இந்திய அரசியலமைப்பில் கற்பனை செய்யப்படாத அளவில், அனைத்து அதிகாரங்களையும் கொண்டு ஒரு GST அமைப்பும் மன்றமும் செயல்படுகிறது.
ஆனால், கட்டமைப்பு வடிவங்கள் மற்றும் தொழில்நுட்பத் தளத்தில் உள்ள குறைபாடுகளால், இந்த அமைப்பு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இயலவில்லை.
மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு. ஒன்றிய அரசு எப்படி ஒரு ஒருங்கிணைந்த அரசாக இருக்கிறதோ (ஒரு தேசத்தை ஒன்றிணைப்பதில்), அதே போல் ஒரு வழித்தோன்றலாகவும் இருக்கிறது
ஒன்றிய அரசுக்கென தனியான வாக்காளர்கள் இல்லை. மாண்புமிகு நடுவண் நிதியமைச்சர் உட்பட இந்த அறையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாநிலத்தின் வாக்காளர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆவர். ஒன்றிய ஆட்சிப்பணி என்று ஒன்றும் இல்லை.
இந்த அறையில் உள்ள ஒவ்வொரு இந்திய ஆட்சிப்பணியாளர்களும் ஏதேனும் ஒரு மாநிலத்திலிருந்து வந்துள்ளனர். மனக்கசப்புடனும், வேண்டா வெறுப்புடனும் ”நன்கொடையாளராக” ஒன்றிய அரசு ஒருபோதும் செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது.
இறுதியாக, தலைவர் அம்மையார் அவர்களே, இந்த முக்கியமான தருணத்தில், சரக்கு மற்றும் சேவை வரியை ஆழமாக மாற்றியமைப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதை நான் தெரிவிக்கின்றேன்.
இப்போது அத்தகைய முயற்சியை மேற்கொள்ளாவிடில் எதிர்காலத்தில் பெரும் இழப்பை நாம் சந்திக்க நேரிடும்.
* தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி கிடைப்பது எப்படி?
மாநில அரசுகளின் தடுப்பூசி டென்டர்களுக்கு உற்பத்தியாளர்கள் கை விரித்ததை சுட்டிக்காட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி.
* கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ 5 லட்சம் வைப்பு நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
18 வயது நிறைவடையும்போது ரூ. 5 லட்சம் வட்டியுடன் தரப்படும்!"
* தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
முன்னாள் காவல் ஆணையர் விஸ்வநாதன் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி ஆபாஷ்குமாரை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
* கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி
அளிக்கிறேன்.
எனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள
முதல்வரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள்.
விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம்- வைரமுத்து.
💥தமிழகத்தில் அசுர வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை!!
கடந்த 25ம் தேதி காலை 38 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்த நிலையில் அன்று மாலை 181 பாதிப்புகள் என செயலரும், மறுநாள் 213 என சுகாதாரத்துறை அலுவலரும், நேற்று 400 என மீண்டும் அமைச்சரே தெரிவித்துள்ளார்
கருப்பு பூஞ்சை நோயுக்கான மருந்துகள் தட்டுப்பாடு!
இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளிக்கு 2 வாரத்திற்கு தினமும் 300mg ஆம்போடெரிசின் மருந்து வழங்க வேண்டிய நிலையில் தற்போது உள்ள 400 நோயாளிகளுக்கே போதுமான மருந்து கையிருப்பில் இல்லை. மருந்தின் கையிருப்பு குறித்தும் துறை அலுவலர்கள் பேச மறுக்கிறார்கள்.
5000 குப்பிகள் எப்போது வரும்!?
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் 5000 மருந்து குப்பிகள் வாங்க இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் அதிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வெருவித் தொற்றில் இருந்து மீள முயலும் நிலையில் கருப்பு பூஞ்சையிலும் அரசு சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
* ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்: பிசிசிஐ துணைத் தலைவர் அறிவிப்பு.
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா தெரிவித்துள்ளார்.
* விருதும்... வைரமுத்து அறிவிப்பும்: சில கேள்விகள்...
கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளாவின் மிக உயரிய ONV விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் 'மீ டூ' விவகாரத்தில் சிக்கியதால், அவருக்கு விருது தர எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, விருது கொடுப்பதை மீளாய்வு செய்யவுள்ளதாக ONV அமைப்பு நேற்று அறிவித்தது.
இப்படிப்பட்ட சூழலில் தனக்கு விருது வேண்டாம், அதை ஏற்க மனம் விரும்பவில்லை என்று வைரமுத்து சொல்லியிருக்கலாம். ஆனால், விருதை திருப்பி தருகிறேன் என கூறியிருப்பதும், விருது தொகை ₹3 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுங்கள் என கூறியிருப்பதும் முரண்பாடாக உள்ளது.
கொடுக்கப்படாத விருதை எப்படி அவர் திருப்பி தர முடியும்.? அதேபோன்று விருதுக்கான தொகையை எப்படி முதல்வர் நிவாரண நிதிக்கு அளியுங்கள் என கூற முடியும்?
விருது மீளாய்வு என்று சொல்லப்பட்டுவிட்டதால், இந்த ஆண்டுக்கான விருதை வைரமுத்துவுக்கு கொடுக்காமல் வேறு ஒருவருக்கு தரலாம் தானே? என பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
* பாலியல் புகார்: செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ்
* குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் பணியைத் தொடங்கியது மத்திய அரசு: விண்ணப்ப அறிக்கையை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்
* ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பிரச்சினை எதுவும் இல்லை; இரட்டைக்குழல் துப்பாக்கி போல அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி
- தமிழக அரசு
* கொரோனா தொற்றால் உயிரிழந்த நீதிபதி வனிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா தொற்றால் உயிரிழந்த நீதிபதி வனிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையில் மக்கள் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி வனிதா உயிரிழந்தார்.
* புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மற்றும் முதல்வருக்கு இடையேயான கூட்டத்தில் மாநில பாஜக தலைவர்கள் மற்றும் ஆளுநருக்கு என்ன வேலை? - மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி கேள்வி
* முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில் தான் மறுத்தேர்வு வினாத்தாள் இருக்கும்: அண்ணா பல்கலை
முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில் தான் மறுத்தேர்வு வினாத்தாள் அமைப்புப் இருக்கும் என அண்ணா பல்கலைக் கழகம் கூறியுள்ளது. நடப்பு செமஸ்டருக்கான வினாத்ததாள் வடிவமைப்பும் பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையில் இருக்கும் என தெரிவித்துள்ளது. செமஸ்டர் தேர்வுக்கு ஜூன் 7க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், ஜுன் 12-க்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
💥தமிழகத்தில் இன்று 30,016 பேருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி
486 பேர் உயிரிழப்பு.
31,759 பேர் மீண்டனர்.
* திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டை ரெலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
* கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு
வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18 வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம்"
கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவு.
தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி உத்தரவு.
புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவு.
💥நான் உறுதியாக மீண்டும் வருவேன், கட்சியின் நிலையை சரிசெய்து விடுவேன் !- சசிகலா
தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.!
No comments:
Post a Comment