பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட மருத்துவத் துறை,வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் பேசி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சையளிக்கவும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறேன். பொதுமக்களும் ஊரடங்கைக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் - பாமக தலைவர் ஜி.கே.மணி MLA - Agnipuratchi

பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட மருத்துவத் துறை,வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் பேசி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சையளிக்கவும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறேன். பொதுமக்களும் ஊரடங்கைக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் - பாமக தலைவர் ஜி.கே.மணி MLA

Share This

பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட மருத்துவத் துறை,வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் பேசி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சையளிக்கவும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறேன். பொதுமக்களும் ஊரடங்கைக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் - பாமக தலைவர் ஜி.கே.மணி MLA                     
         
பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த வேண்டி மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் நேரில் சென்று தீவிர நடிவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். தொடர்ந்து மருத்துவமனை மருத்துவர்களுக்கும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கும் பேசி, கிராமங்களில் பிளீச்சிங் பவுடர் போட்டு மருந்து தெளித்தல், மருத்துவ முகாம் நடத்துவது, கொரோனா பரிசோதனை செய்து 24 மணி நேரத்திற்குள் ரிசல்ட் கிடைக்கச் செய்வது, தேவைப்படுவோருக்கு CT ஸ்கேன் எடுப்பது, நோய் கண்டறிந்து வருவோருக்கு பென்னாகரம் அரசு மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜெயம் கல்லூரி சிகிச்சை மையம், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சையளிப்பது, உடல் பாதிக்கப்ட்டு ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு தாமதமின்றி உடனடியாக ஆக்சிஜன் கொடுப்பது, அத்யாவசிய உணவுப் பொருட்களை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், பேரூராட்சிகளில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, உள்ளாட்சி நிர்வாகம்,வருவாய்த் துறை நிர்வாகம் மூலம் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு வினியோகிப்பது, நியாயவிலைக் கடைகள் மூலம்  குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் ரூ 2,000 + ரூ.2,000 வழங்குவது உள்ளிட்ட கொரோனா கால நடிவடிக்கைகள் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக, வேகமாக செயல்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன்.               
        
இந்த நெருக்கடி கால மக்கள் பாதுகாப்புப் பணிகளில் மேல்அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஒன்றியக் குழு தலைவர்கள்,ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், நியாயவிலைக் கடையினர்,கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து துறையில் உள்ளவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களை பாதுகாப்பதற்கான பணிகளில் தீவிரப்படுத்த வேண்டி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.              
       
கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் வரும் நெருக்கடியான இச்சூழலில், பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும் ஊரடங்கை கடைபிடித்தும் முழு விழிப்புடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.                 
            
இது என் நாடு, என் நாட்டு மக்கள், என் நாட்டு மக்களுக்காக, மக்களை பாதுகாக்க, என்னால் இயன்ற அளவு அர்ப்பணிப்புடன், சேவை நோக்கத்துடன் நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். போர்க்களத்தில் செயல்படுவதைபோல கொரோனா பெருந்தொற்றிலிருந்து பொதுமக்களைக் காக்க ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.          
         
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் செயல்படுவோரும் பொதுமக்கள் உயிர் காக்கும் மருத்துவச் சேவையில் செயல்படுவோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages