அக்னிப்புரட்சி இன்றைய (30.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (30.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (30.05.2021) முக்கிய செய்திகள்.

💥IS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும் நபரை மயிலாடுதுறையில் தேசிய விசாரணை முகமை அலுவலர்கள் கைது செய்தனர்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.95.51 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.89.65 க்கும் விற்பனை.

* உள்ளம் நிறைந்த கலைஞரை நம் இல்லத்திலேயே கொண்டாடுவோம்.

கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் உயிரை காப்பதே நம் தலையாய பணி. முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

* வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு:

மிகவும் தீவிரமாக, வேகமாக காற்றில் பரவ கூடிய கொரோனா வகை வியட்நாமில் கண்டுபிடிப்பு.

2 மோசமான கொரோனா வகை இணைந்து உருவான புது 'வேரியண்ட்'-வியட்நாமில் மக்கள் கலக்கம்.

புதிய வகை கொரோனாவால் வியட்நாமில் மக்கள் பலர் பாதிப்பு.

* இந்தியாவில் குறைந்து வரும் கொரனோ தொற்று

இந்தியாவில் மூன்றவாது நாளாக கொரனோவால் பாதிக்கபட்டவர்களின் ஒரு நாள் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் குறைவு! - நடுவண் சுகாதாரத்துறை அமைச்சகம்.

* மோட்டார் ஊர்தி ஆய்வாளர் பணியிடங்களுக்கு சூன் 8-11 வரை நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

சூன் 22-30 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகளும் ஒத்திவைப்பு என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

* திருச்சியில் நகரத்தை விட சிற்றூர்களில் மருத்துவம்  பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

💥கொரோனா தொற்றால்  பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ₹10 லட்சம் இழப்பீடு  வழங்க வேண்டும்!

மேலும் அக்குழந்தைகளுக்கு நடுவண் அரசு நடத்தும் கேந்நிவாரணம்திரா வித்யாலயா பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி அளிக்கவும் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி ஆணை

* ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு.

ஊராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காத நிலையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.

* 2017,2018,2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அவகாசம்.

3 மாதங்களுக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிப்பு.

tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலம் புதுப்பிக்க வேண்டும்.

* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார்.

கடந்த சில நாட்களாக சென்னையை காட்டிலும், கோவையில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், இன்று ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.

பின், அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இரண்டு மாவட்டங்களில் ஆய்வு முடித்துவிட்டு மதியம் 12:30 மணியளவில், முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார்.

* கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர மண்டலத்துக்கு 10 வீதம் 50 கார்கள் இயக்கப்படும் திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின்னர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், பிபிஇ கிட் உடை அணிந்து நோயாளிகளை சந்தித்து சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

* பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்தது தெற்கு ரயில்வே.

சென்னை சென்ட்ரல் விஜயவாடா சிறப்பு ரயில் இரு மார்க்கங்களிலும் ஜூன் 2 முதல் 14ம் தேதி வரை, சென்னை சென்ட்ரல் - புட்டபர்த்தி சிறப்பு ரயில் ஜூன் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை, புட்டபர்த்தி- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை ரத்து.

சென்னை சென்ட்ரல் - திருப்பதி சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் ஜூன் 1 முதல் 15 வரை, ஏர்ணாகுளம் - கண்ணூர் சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் ஜூன் 1 முதல் 15 வரை ரத்து.

#️⃣GoBackStalin உலகளவில் ஆறாவது இடத்தில் Trend ஆகி வருகிறது!

தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் ஒரு மாவட்டத்தை பார்வையிட செல்கையில் இது போன்று Trend ஆவது இதுவே முதல்முறை!

* கொரோனா தடுப்பு பணி: கோவை, திருப்பூர், ஈரோட்டில் முதல்வர் ஆய்வு.

Go Back Stalin ட்விட்டரில் டிரெண்ட் ஆகியிருக்கும் நிலையில், ஸ்டாலினுக்கு ஆதரவாக We Stand With Stalin என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகியுள்ளது.

*26 நாட்களுக்கு பின்னர் புதுச்சேரியில் 1000க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

TPR விகிதம் 12.1% ஆக குறைந்துள்ள நிலையில் தொற்று பாதித்து மருத்துவம் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 24% குறைந்து வருகிறது.

கொரோனா விழிப்புணர்வு பாடல்...

நன்றி: கோமதி நாயகம் (தமிழ்க் கடல் நெல்லை கண்ணனின் அண்ணன் மகன்)

* சென்னை வாழ் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய    தேவைகளை பெற சென்னை மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்ட கீழ்கண்ட வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

👉 https://t.co/Vcin1ZWbBG

👉 Namma Chennai APP

👉 Help line numbers 9499932899 / 044-45680200

* இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் உள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் / தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை கொரோனா தொற்று சூழல் காரணமாக 15.06.2021 வரை மூடப்படுகிறது.

* சென்னை PSBB பள்ளியில் மேலும் ஒரு ஆசிரியர் கைது!

சிறுமி- கற்பழிப்பு குற்றச்சாட்டின் பேரில்  அந்த பள்ளியின் கராத்தே பயிற்றுநரை கைது செய்து விசாரித்து வருகிறது அண்ணா நகர் மகளிர் காவல் நிலையம்

* கோவை புறக்கணிப்படவில்லை! : முதலமைச்சர்

எந்த ஒரு ஊருக்கும் பாரபட்சம் காட்ட மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

தேவைப்பட்டால் இரண்டு நாட்களுக்கு பிறகு கூட கோவை வருவேன்.
- முதலமைச்சர் முக ஸ்டாலின்

💥பொதுமக்கள் கொரோனா வெருவித் தொற்று பாதிப்பு- மருத்துவ செலவுகளை சமாளிக்க ₹5 இலட்சம் வரை கடன் வழங்க உள்ளதாக பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு

இன்று இந்திய வங்கியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் SBI இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தகவல்.

இதை தொடர்ந்து கொரோனா மருத்துவ உதவிக்காக 8.5% வட்டி விகிதத்தில் ₹25,000 முதல் ₹5 இலட்சம் வரை 5 ஆண்டுகள் தவணை செலுத்தும் வகையில் தனிநபர் கடனாக வழங்க உள்ளதாக SBI அறிவிப்பு

* அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை  உள்ளிட்ட  5 பிரிவுகளில்  அனைத்து மகளிர் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்துள்ளனர்

* தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிரிழப்பு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,864 பேருக்கு கொரோனா உறுதி.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 493 பேர் கொரோனாவுக்கு பலி.

இன்று 32,982 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

* கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் நாளை 31.05.2021 அன்று மருத்துவ முகாம்கள் (swab test) நடைபெறும் இடங்கள்.

💥சென்னை வாழ் மக்களுக்கு...
பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் அவர்களின் பகுதிகளிலேயே கிடைக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டகளின்களின் மூலம் விற்பனை செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீடுகளுக்கே கொண்டுசென்று விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries/ என்ற இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்காடியின் பெயர், தொலைபேசி எண், வார்டு மற்றும்  அந்த பகுதியில் உள்ள சிறிய கடை அல்லது சூப்பர் மார்க்கெட் என வகைப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது.

* உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இயற்கை விவசாயம் முறையில் விளைவிக்கப்பட்ட ஞமாப்பிள்ளை சம்பா அரிசி!

மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் பார்சல் அனுப்பப்படும். பணம் Gpay-யில் அனுப்பலாம். இது இயற்கை விவசாயியின் நேரடி விற்பனை. ஒரு கிலோ அரிசி ₹75 மட்டுமே. ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு மாற்றம் தெரியும்.

அணுகவும்...
வெங்கடேஸ்வரா இயற்கை விவசாயம்
மயிலாடுதுறை
72999 99975
99940 32328

* கோவையில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு ஒரே நாளில் 47 உயிரிழப்பு

3537 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உருவாகி தமிழகத்தில் அதிக பாதிப்பு மிகுந்த  மாவட்டமாக கோயம்புத்தூர்  உள்ளது

* தஞ்சாவூர்: எளிய முறையில் வெறும் 20 நாளில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள்
Call or WhatsApp: +919791788424

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages