பா.ம.க. இளைஞரணி மாநில துணைத் தலைவர் கோ.சி. இராஜா மறைவுக்கு இரங்கல் - மருத்துவர் இராமதாசு இரங்கல்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில துணைத் தலைவர் கோ.சி. இராஜா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சிறு வயதிலிருந்தே கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டி வந்தவர். அரசியலில் பல உயரங்களை அடைந்திருக்க வேண்டியவர். மிக இளம் வயதில் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெரும் சோகம் ஆகும்.
கோ.சி. இராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment