மகுடஞ்சாவடி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சுமதி, அவரது மகள் ஜமுனாதேவி மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியக் குழுவின் முன்னாள் பெருந்தலைவர் சுமதி முத்துசாமி, அவரது மகள் ஜமுனாதேவி ஆகிய இருவரும் காலமானார்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
மகுடஞ்சாவடி ஒன்றியப் பெருந்தலைவராக இருந்த காலத்தில் மிகச்சிறப்பாக மக்கள் பணியாற்றியவர் சுமதி. கட்சியின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். அவரது மக்கள் ஜமுனாதேவி வாழ்க்கையில் முன்னேறி பல சாதனைகளை படைக்க வேண்டியவர். அவர்கள் இருவரும் இளம் வயதிலேயே இவ்வுலகை விட்டு பிரிந்தது தாங்க முடியாத சோகம் ஆகும்.
மனைவி சுமதி, மகள் ஜமுனாதேவி ஆகிய இருவரையும் இழந்து வாடும் முத்துசாமி, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment