வர வேண்டும்... வர வேண்டும்...
இப்படிப்பட்ட தேர்தல் நடக்கும் சூழல்!
வரம் வேண்டும்... வரம் வேண்டும் அதற்காக முருகப் பெருமானின் வரம் வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அய்யா
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல்...
நேர்மையும், மக்களுக்கு நன்மை செய்வதற்காக செயல்திட்டங்களும் கொண்ட ஒருவன் தேர்தலில் தனித்து களமிறங்குகிறான்.
அவனிடம் பணம் இல்லை. ஆனாலும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான திட்டங்களும் இருந்தன.
அதனால் அவன் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தான். தனது திட்டங்கள் குறித்து மக்களிடம் பேசினான்.
‘‘ மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால், என்னிடம் பணம் இல்லை. மக்களிடம் பணம் இருந்தால் எனது தேர்தல் செலவுக்கு தாருங்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை.... உங்களின் வாக்குகளை எனக்குத் தாருங்கள். உங்களுக்காக நான் உழைப்பேன்’’ என்று வாக்குறுதி அளித்தான்.
அதிசயம் நிகழ்ந்தது. அந்தத் தேர்தலில் அவரே வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனான். மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்தான்; குறைகளை களைந்து சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டான்.
இனி வரும் காலங்களிலும் இதே போன்ற நல்லவர்களை, அவர்கள் பணம் இல்லாதவர்களாக இருந்தாலும் சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். அதற்கான சூழல் அமைய முருகப்பெருமான் வரம் தர வேண்டும்.
(குறிப்பு: என்னுடன் தொலைபேசியில் உரையாடிய முருக பக்தர் ஒருவர் அவரது கனவாக தெரிவித்த தகவல்கள் எழுத்து வடிவில்.)
No comments:
Post a Comment