அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

உன்னதமான அன்னையர் தினத்தில் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். தாயில்லாமல் நானில்லை என்பதை பெருமையுடன் எண்ணிப் பார்க்க வேண்டிய நாள். மனித சமுதாயத்தில் சாதாரண ஏழைக் கூலித் தொழிலாளி முதல் உலகப் பணக்காரர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் வரை எல்லோரும் அவரவர் தாய் வயிற்றியிருந்து வந்தவர்கள். உலகில் எங்கு வாழ்ந்தாலும் இன்று ஒரு நாள் ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயுடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் அனைவரும் இன்று தாயை குளிக்க வைத்து , புத்தாடை அணிவித்து,தாய் விரும்பும் உணவு தயாரித்து கொடுத்து,தாயுடன் சேர்ந்து உண்டு மகிழ வேண்டும்.
          
தாய் கண்கண்ட தெய்வம், குடியிருந்த கோயில், தன் வயிற்றில் கருவை 10 மாதம் (300 நாட்கள் ) தொந்தி  சரிய சுமந்து  உலகிலேயே கொடிய  பிரசவ வேதனைப்பட்டு உதிரம் சிந்தி  பெற்றெடுத்தவள். பின் கொசு, ஈ கடிக்காமல் பாலூட்டி, தாலாட்டி,சீராட்டி, பாராட்டி, துணி உடுத்தி ,உணவும் திண்பண்டமும் ஊட்டி வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கியவள் தாய்.
          
நல்ல படிப்புக்கும் ஒழுக்கத்திக்கும் உயரிய பண்புக்கும் அடித்தளமாக இருந்து உயர்ந்த நிலைக்கு உருவாக்கியவள் தாய். ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் காரணமாக இருந்த தாயை உயிர் உள்ளவரை மனம் நோகாமல், கண் கலங்காமல் போற்றி வணங்கி பாதுகாக்க வேண்டும்.
         
மனிதனின் உன்னதமான தாயை சிலர் கொடுமைப்படுத்துவதும் , கண்டுகொள்ளாமல் பாதுகாக்காமல் விடுவது மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றம். சகித்துக்கொள்ள முடியாத கொடூர செயல். இப்படி யாரும் இருக்கக்கூடாது.
          
ஒவ்வொருவரும் அன்னையர் தினத்தில் தாயை வணங்கி போற்றி பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும்.
சக்தி மிக்க பெண்களுக்கு இனிய வாழ்த்துக்கள். பெண்கள் இல்லாமல் குடும்பம் இல்லை, நாடு இல்லை,உலகம் இல்லை. அன்னையர்களான பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன், நீண்ட ஆயுளுடன் இனிதே வாழ அன்னையர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages