அக்னிப்புரட்சி இன்றைய (09.05.2021) முக்கிய செய்திகள்.
* ஆவின் பாலின் குறைக்கப்பட்ட விலைப்பட்டியல் குறித்த அரசாணை வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைத்து உத்தரவிட்டார்.
சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை ரூ. 40லிருந்து ரூ. 37ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தாயின் அன்பு புனிதமானது; தனித்துவமானது - அன்னையர் தின வாழ்த்துகள்.
* இந்திய பெருங்கடலில் மாலத்தீவு அருகே சீன ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம் விழுந்ததாக அறிவிப்பு.
சீனா விண்ணில் ஏவிய ராக்கெட் பணி முடிந்ததால் கட்டுப்பாடு இல்லாமல் பூமியை நோக்கி திரும்பியது.
18 டன் எடையுள்ள சீன ராக்கெட்டின் பாகம் பூமியில் எங்கே விழும் என எதிர்பார்ப்பு நிலவியது.
சீன ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம் பூமியில் விழுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் உட்பட 33 அமைச்சர்கள் பங்கேற்பு.
கொரோனா நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
* கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான கட்டளை மையத்திற்கு அதிகாரிகள் நியமனம்.
கொரோனா கட்டளை மையத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக தாரீஸ் அகமத் நியமனம்.
ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கை வசதிகள் குறித்த விவரங்களை கட்டளை மையம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
* தலைநகர் டெல்லியில் வரும் 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு
நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், 17ஆம் தேதி வரை நீட்டிப்பு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
* தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் -அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - ஸ்டாலின்.
ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
* அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட "கல்வி தொலைக்காட்சி" நிறுத்தப்பட மாட்டாது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இன்னும் ஆக்கப்பூர்வமான பல நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு புதுமையான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்படும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
💥தமிழகத்தில் ஒரே நாளில் ₹426 கோடி மது விற்பனை..!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 நாட்களுக்கான விற்பனை நடைபெற்றுள்ளது.
இன்று நடைபெற்று வரும் விற்பனையை கணிக்கும் போது ஊரடங்கால் TASMAC கடைகள் மூடப்படுவதால் அரசுக்கு எந்த வருவாய் இழப்பும் இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
* கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு ரூ.533.2 கோடி ஒதுக்கீடு.
25 மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி ஒதுக்கீடு-மத்திய நிதியமைச்சகம் உத்தரவு.
* சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வேளாண்மை துறை செயலாளர் பணியாற்றிய வந்த ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* முழுஊரடங்கு நாளைமுதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ
நடந்துகொள்ளக்கூடாது- காவல் துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை.
* தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை.
தொழில்துறையினர் உடனான கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.
தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது.
மறுபடியும் ஊரடங்கு என்கிற சூழல் உருவானால் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும்.
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கிடைக்கும்- தங்கம் தென்னரசு.
ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழில்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது - தங்கம் தென்னரசு.
ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்- தங்கம் தென்னரசு.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.
💥ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் - இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு
💥தமிழக சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு
💥 தமிழகத்தில் 29,000-ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு
இன்று ஒரே நாளில் மேலும் 28897 கேருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி. இன்று மட்டும் 236 பேர் உயிரிழப்பு
* முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் 6 முதன்மை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
* தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நியமனம்
* முன் களப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடுக! : தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
மேலும் இறந்த முன் களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அரசு சார்பில் வழங்கிட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்!
* 7 தமிழர் உள்ளிட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாழும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை.
No comments:
Post a Comment