அக்னிப்புரட்சி இன்றைய (02.06.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.06.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.06.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.95.99 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.90.12 க்கும் விற்பனை.

* புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று பிற்பகலில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்படுகிறது -  வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்க உள்ள போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

* தன்னை அதிமுகவின் 'பொதுச்செயலாளர்' பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி, சசிகலா தொடர்ந்த வழக்கு வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது

* ரவுடி சி.டி மணியை சென்னையில் கைது செய்தது காவல்துறை

* புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதன் காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

* மாணவர்களின் பாதுகாப்பு, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

* ஆக்சிஜனை அதிகரிக்கும் உணவுகள்!

நம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகமாக ஈர்த்துக் கொள்ளக் கூடிய உணவுகளை, 'ஆக்சிஜன் ரேடிகல் அப்சார்ப் கெப்பாசிட்டி' எனப்படும், ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பை வைத்து கண்டுபிடிப்பர். இதில், குறிப்பிட்ட உணவை பரிசோதனை கூடத்தில் வைத்து, ஆராய்ச்சி செய்யப்படும். ஓ.ஆர்.ஏ.சி., அதிகம் உள்ள உணவை, நாம் அன்றாடம் சாப்பிடும் போது, நம் உடலில் ஆக்சிஜன் அளவை சீராக நிர்வகிக்க முடியும்; ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும்.

ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ள மசாலா பொருள் கிராம்பு. 100 கிராம் கிராம்பை பரிசோதித்ததில், அதில் மூன்று லட்சம் ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பு உள்ளது தெரிந்தது. இதை மசாலா குழம்பு, தக்காளி சாதம், பிரியாணி என்று அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு கிராம்பாவது நம் உடலுக்கு அவசியம்.

அடுத்து, மஞ்சளில் ஒரு லட்சத்து 2,700 ஓ.ஆர்.ஏ.சி., உள்ளது. மஞ்சளை தேனீரில் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள், மிளகு சேர்த்து பால் குடிக்கலாம். சமையல் அனைத்திலும் தவறாமல் மஞ்சள் சேர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை தரும்; ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்.

அடுத்து, பட்டை. இதை பொடி செய்து டீயில் சேர்த்துக் கொள்ளலாம். சமையலில் எதில் எல்லாம் சேர்க்க முடியுமோ, அவற்றில் எல்லாம் சேர்க்கலாம். கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு இவற்றிலும் ஆக்சிஜனை ஈர்க்கும் தன்மை அதிகம். கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று சாப்பிட பழக வேண்டும்.

துளசி செடியை சுற்றி வரும் போது துாய்மையான ஆக்சிஜன் கிடைக்கும். 10 இலைகளைப் பறித்து, சுத்தமாக கழுவிய பின், மென்று சாப்பிடலாம். நம் முன்னோர்கள் செய்வதில் நிச்சயம் அர்த்தம் இருக்கும். துளசிக்கு இதனால் தான் அத்தனை முக்கியத்துவம் கொடுத்தனர்.

இது தவிர, எலுமிச்சையை சாறு பிழிந்து குடிக்காமல், முழு பழத்தை வெட்டி, அப்படியே நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். பட்டாணி, பீன்ஸ், சோயா, கொண்டைக் கடலை, காராமணி ஆகியவற்றில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும், 'லெகாமா குளோபின்' என்ற கூட்டு வேதிப்பொருள் உள்ளது.

இவை புரதம், இரும்பு சத்து அதிகம் உள்ளவை. இரும்பு சத்து குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் குறைய வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில் உள்ள இரும்பும், புரதமும் சேர்ந்த ஹீமோகுளோபின், ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக் கூடியது.
பசலை கீரை, முருங்கை கீரை, தர்பூசணி, அவித்த வேர்க்கடலை, அன்னாசி உட்பட, இந்த சீசனில் கிடைக்கும் இரும்பு சத்து அதிகம் உள்ளவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும்.

டாக்டர் ஆர்.மைதிலி,
ஆயுர்வேத மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், சென்னை

* நடுவண் அரசின் புலனாய்வு அல்லது பாதுகாப்பு தொடர்பான துறைகளில் பணியாற்றியவர்கள் ஓய்வு பெற்ற பிறகு எழுதும் புத்தகங்களை துறையின் உரிய முன் அனுமதியின்றி எழுதக் கூடாது என நடுவண்  அரசு ஆணை

குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கான முதலீட்டு மானியம் பெறுவதற்கு விற்றுமுதல் 25 விழுக்காடு அதிகரிக்க வேண்டுமென்ற விதிமுறையிலிருந்து ஏற்கெனவே 31.03.2021 வரை விலக்கு
அது 31.12.2021 வரை 9 மாதகாலத்திற்கு நீட்டிப்பு!

* கோவையில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. மாதம் ₹12000 தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது

* தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா வேண்டாமா என மருத்துவர்களுடன் ஆலோசிக்க முடிவு- அமைச்சர்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை பிரதமர் மோடி ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று ஆலோசனை.

முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

* மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பு கருத்துகளை கேட்டு முடிவு செய்ய முதல்வர் அறிவுரை.

2 நாட்களுக்குள் கருத்து கேட்டு ஆலோசனை செய்ய முடிவு.

மாணவர்களின் உடல்நலன் , பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் அறிவுரை.

பிளஸ் 2 மதிப்பெண்ணும் முக்கியம் என்பதால் இதை கவனமாக கையாள வேண்டும்- அமைச்சர்.

* tnschoolsedu21@gmail.com என்கிற இணையதள முகவரியிலும்

14417 என்கிற உதவி எண்ணிலும் மாணவர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களை பதிவு செய்யலாம் என  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

* தமிழ்நாட்டிற்கு போதிய தடுப்பூசிகளை வழங்கக்கோரி நடுவண் சுகாதாரத்துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

* தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:

நெல்லை, சேலம், திருப்பூர் போலீஸ் கமிஷனர்கள் இடமாற்றம்.

நெல்லை காவல் ஆணையராக செந்தாமரைக் கண்ணன் நியமனம்.

சேலம் மாநகர ஆணையராக நஜ்முல் ஹோடா நியமனம்.

திருப்பூர் மாநகர  காவல் ஆணையராக வனிதா நியமனம்.

* நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது செல்லும்.

புதுச்சேரி சட்டமன்றத்துக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்.

* முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் புகார் அளித்துள்ளதாக சாந்தினி மீது மணிகண்டன் குற்றச்சாட்டு.

* 2ம் தவணை கொரோனா நிவாரணம் நாளை தொடக்கம்.

2ம் தவணை கொரோனா நிவாரணம் ரூ.2000 வழங்கும் திட்டத்தை நாளை தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கக் கூடாது-ஓபிஎஸ் வலியுறுத்தல்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைத்து அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

* 21 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம்.

டவ்-தே புயலால் காணாமல்போன 21 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நாகை, மயிலாடுதுறை, குமரி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி.

ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இல்லை : தமிழக அரசு அறிவிப்பு.

மின்தடைக்காக அனுமதி தருவது முழு ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைப்பு.

பராமரிப்பு பணிக்காக மின் வாரியத்தால் தரப்படும் மின்தடை  அனுமதி ஒத்திவைப்பு.

* தமிழகத்தில்  இன்று மேலும் 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று மட்டும் 32,263 பேர் மீண்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 483 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 2,88,702 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 3061 பேருக்கு கொரோனா பாதிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages