கொரோனா பெருந்தொற்று கொடிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. பரவல் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தற்காப்புதான் மிகுந்த பாதுகாப்பு - பாமக தலைவர் ஜி.கே.மணி
கொரோனா பெருந்தொற்று நிறைய குடும்பங்களை சூறையாடி வருகிறது. ஊரடங்கு சூழலில் முடங்கியிருக்கும் வேளையில் பரவல் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது. அதே வேளையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்தார்கள் 2 பேர் மருத்துவமனையில் உள்ளார்கள் என்ற செய்தியும் ஒரு சிற்றூரில் 15 பேர் இறந்தார்கள் என்ற செய்தியும் ஒரு ஊராட்சியில் 20 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். குழந்தைகள் தவிர பெற்றோர்கள் இறந்தார்கள் என்ற செய்திகள் வந்துகொண்டிருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு வேதனையளிக்கிறது. கைபேசி அழைப்பை எடுத்தவுடனே காலை முதல் நள்ளிரவு வரையிலும் விடியற்காலையிலும் கதறி அழும் சோகக் குரலே ஒலிக்கிறது.
அரசு மருத்துவமனையிலோ தனியார் மருத்துவமனையிலோ சேர வேண்டும் என்றும், சேர இடம் கிடைக்கவில்லை என்றும்,மூச்சுத் தினறல் ஏற்படுகிறது ஆக்சிஜன் படுக்கை கொடுக்கச் சொல்லுங்கள் என்றும், கவலைக்கிடமாக உள்ளது என்றும், ICUவில் சேர்க்கச் சொல்லுங்கள் என்றும்,ரெம்டெசிவிர் ஊசி போடச் சொல்லுங்கள் என்றும்,இறந்துவிட்டார் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுச் செய்யுங்கள் என்பதுமான குரல் மாறிமாறி வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து கொண்டே இருக்கிறது. பொதுமக்களுக்கு எவ்வளவு வேதனையும் சோதனையும் துடிப்பும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மிகப் பெரிய வேதனையாக உள்ளது.
இந்த கொடிய கொரோனா போர்க்களத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். லேசான அறிகுறி என்றால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தடுப்பூசி போடுங்கள். வெளியில் செல்லாதீர்கள். இன்று பாதுகாத்துக்கொண்டால் நாளை நலமுடன் வாழலாம்.
தற்காப்பே பாதுகாப்பு...
Home
அண்மை செய்திகள்
கொரோனா பெருந்தொற்று கொடிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. பரவல் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தற்காப்புதான் மிகுந்த பாதுகாப்பு - பாமக தலைவர் ஜி.கே.மணி
கொரோனா பெருந்தொற்று கொடிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. பரவல் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தற்காப்புதான் மிகுந்த பாதுகாப்பு - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment