அக்னிப்புரட்சி இன்றைய (05.06.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.06.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.06.2021) முக்கிய செய்திகள்.

* ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் திட்டமில்லை எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

* தடுப்பூசி முன்பதிவு இணையதளத்தில் அடுத்த இரண்டு நாட்களில் தமிழ் மொழியிலும் வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக அரசிடம் நடுவண் அரசு உறுதி

🔥திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி மின்னல் தாக்கியதால் தீப் பற்றி எரிந்தது!

இதன்காரணமாக சுற்றியுள்ள 25 ஊர்கள் இருளில் மூழ்கியுள்ளன. கட்டுப்படுத்த முடியாத தீ காரணமாக அருகில் உள்ள ஊர்களுக்கு பரவக்கூடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.96.23 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.90.38 க்கும் விற்பனை.

* மொரிசீயஸ் நாட்டின் முன்னாள் முதன்மை அமைச்சரின் மறைவையொட்டி தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் கடைப்பிடிப்பு!

* ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி.

ரஷ்யாவின் தொற்று நோய்வியல் மற்றும் நுண் உயிரியலில் காமாலேயா ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து புனேவில் உள்ள அட்டாஸ்ஃபர் மையத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது.

3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின் உரிமம் நீக்கப்படும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

* அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துடனான, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் சுமார் 20 நிமிடங்கள் வரை ஆலோசனை நடைபெற்ற நிலையில் நிறைவு.

* கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு.

கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு.

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி தீவிரம்.

நேரடி வகுப்புகளைப் போன்று, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற வாய்ப்பு.

7 பேர் கொண்ட குழு வரும் 11ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.

* தமிழகத்தில் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு:

மளிகை, பலசரக்குகள் காய்கறி, இறைச்சி கடைகள் நேரக்கட்டுபாடுடன் செயல்பட அனுமதி.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி.

ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.

ஜூன் 14 வரை அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக், சலூன்கள், தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

* 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் என்ன ?

கோவை,நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக உள்ளது.

இம்மாவட்டங்களில் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதே சமயம், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 7 முதல் அனுமதிக்கப்படுகிறது.

தனியாக செயல்படுகின்றy மளிகை, பலசரக்குகள், காய்களிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக்கடைகள் காலை 6: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மீன்சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

இறைச்சிக் கடைகள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.

சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ- பாஸ் பெற்று பயணிக்க வேண்டும்.

கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுபபுவதற்காக மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியன விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

* சென்னை கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் மே 26 ஆம் தேதி தீ பற்றி எரிந்த போது பச்சிளங்குழந்தைகள் மற்றும் தாய்மார்களை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரை முதல்வர் முக.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்

* தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் NEET தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க குழு அமைத்தது தமிழக அரசு

ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமை தாங்குகிறார்

* முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜை கைது செய்யக்கோரி அறப்போர் இயக்கம் போர்கொடி. ₹2028 கோடி மதிப்பில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு

* அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்.

அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு ஆசிரியர்கள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

* ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது - டாஸ்மாக் மேலாண் இயக்குனர்.

* பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டிருந்தது.

* அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை- வானிலை மையம்.

புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் மழை.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதிகளிலும் மழை பெய்யும்.

திருவண்ணாமலை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

* 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு:

செங்கல்படு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா நியமனம்.

திருவண்ணாமலை எஸ்.பி.யாக பவன் குமார் ரெட்டி, விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீனதா, கடலூர் எஸ்.பியாக சக்தி கணேஷ் நியமனம்.

* தமிழகத்தில் இன்று 21,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

32,472 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 443 பேர் உயிரிழப்பு.

2,57,463 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை

* தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதி - முதலமைச்சர் ஸ்டாலின் .

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages