தைலாபுரம் தோட்டத்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் - மருத்துவர் இராமதாசு அய்யா
நான் வாழும் தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தான் உலகின் தூய்மையான ஆக்சிஜன் ஆகும். இது விற்பனைக்கு அல்ல. இலவச வினியோகம் தான்.
அந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை இன்று காலை சுமார் அரை மணி நேரம் ஆய்வு செய்தேன். அனைத்தும் மிகச்சரியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
நான் சொல்வது உங்களுக்கெல்லாம் நன்றாக புரியும் என்று நினைக்கிறேன்.
நாம் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை மரங்களும், தாவரங்களும் தான் தருகின்றன. எங்கள் தோட்டத்தில் ஓங்கி வளர்ந்துள்ள மரங்களையும், தாவரங்களையும் தான் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் என்று குறிப்பிட்டேன்.
No comments:
Post a Comment