அக்னிப்புரட்சி இன்றைய (11.06.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.06.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.06.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 97.19 ரூபாய்க்கும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து லிட்டர் 91.42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* கொரோனா நிவாரணம் 2-வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்க இன்று முதல் டோக்கன் விநியோகம்.

குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகைப் பொருட்களும் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

* ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது:

அடுத்த ஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம்.

இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஜன.,1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

வங்கிகள் இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

* பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நிராகரித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழில் கூட்டாளி ஒகுஜன் நிறுவனம் அமெரிக்காவில் இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தது.

ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்க மறுத்து உள்ளது. கூடுதலாக பரிசோதனைகளை நடத்திய முடிவுகளை தர வேண்டும் அதன்பிறகுதான் பயோ உரிமை விண்ணப்பத்திற்கு தாக்கல் செய்ய முடியும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பெறப்படும் ஒப்புதல் முழு ஒப்புதல் என்று அழைக்கப்படுகிறது.

எனவே கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

* தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்வு

2010-11-ல் 32.9% ஆக இருந்த நிலையில், 2019-20-ல் 51.4% ஆக உயர்வு

NEP-ல் 2030-க்குள் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு 10 ஆண்டுகள் முன்னோக்கி பயணம்.

* 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி, அதை 92 ஏழை நாடுகளுக்கு அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு.

இந்தாண்டிற்குள் 20 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.

* திருச்சி : கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

* நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில் முதலமைச்சர் இன்று கல்லணையில் ஆய்வு.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங். கட்சியினர் போராட்டம்.

பெட்ரோல், டீசல் விலை பல்வேறு பகுதிகளில் 100 ரூபாயை எட்டியுள்ள நிலையில் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

* கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

வழக்கறிஞர் ஸ்ரீராஜலக்ஷ்மி தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆய்வு செய்தது குறித்து ஆரம்ப கட்ட அறிக்கையை 28ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு.

RTO அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை.

புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்.

புதிய நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

* கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணி - முதல்வர் ஸ்டாலின் ஆய்வு:

கொடிங்கால் வாய்க்கால் தூர் வாரும் பணி ரூ.29.70 லட்சத்தில் நடைபெறுகிறது.

திருச்சியில் 63.162 கி.மீ தூரத்திற்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 589 பணிகளுக்கு ரூ.62.90 கோடி ஒதுக்கீடு.

* புனேவில் இருந்து மத்திய அரசின் தொகுப்பு மூலம் தமிழ்நாட்டுக்கு 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளன - மாவட்டங்களுக்கு விரைவில் பிரித்து அனுப்பப்பட உள்ளன.

* தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

கொரோனா தடுப்பூசி வழங்கல், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

* தென்னக இருவுள் துறையில் 3378 பணி பயிலுனர் இடங்கள் நிரப்பப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு/ ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு ஏதுமின்றி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு.

*:அமெரிக்காவில், கோவேக்சின் தடுப்பூசியை நெருக்கடி கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக்கோரிய விண்ணப்பத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்க மறுத்துள்ளது

* 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை எந்தவொரு காரணமும் கூறாமல், மேற்கு வங்க அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என மாநில அரசுக்கு  உச்சநீதிமன்றம் ஆணை

* தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

அழகு நிலையங்கள், சலூன்கள், டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி! -தமிழக அரசு.

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9மணி முதல் மதியம் 2மணி வரை செயல்பட அனுமதி.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி.

ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை, 6:00 மணி வரை, சில தளர்வுகள் விவரம்:

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி.

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.

கண்கண்ணாடி கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டுமணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள், பல்ககலைகழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிர்வாக பணிகளுக்கு அனுமதி.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் அல்லது 10 நபர்கள் மட்டும் செயல்பட அனுமதி.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி.

ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் அனுமதி.

இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.

செல்போன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி.

வேளாண் உபகரணங்கள், பம்பு செட்டு பழுது நீக்கும் நிறுவனங்கள், மண்பாண்டகள் கைவினை பொருள் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைபயிற்சிக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி.

சைக்கிள், பைக் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை செயல்பட அனுமதி.

தொற்று பரவல் அதிகமுள்ள சேலம் நாமக்கல்,ஈரோடு, கரூர், கரூர்,திருப்பூர், கோவை, நீலகிரி ,தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளுக்கு அனுமதி.

* 10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின், வரும் 14 - 17-ம் தேதிக்குள்ளாக https://apply1.tndge.org/login என்ற இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி திருத்திக்கொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

* தமிழ்நாட்டில் இன்று 15759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 378 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 29243 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 174802 ஆக உள்ளது.

* சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர் திருச்சி கே.கே.நகர் காவல்துறையினர்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி அவதூறாக பதிவிட்ட நபரின் கடைக்கு சென்று, அவரை மிரட்டி வீடியோ எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டதாக மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages