அக்னிப்புரட்சி இன்றைய (16.06.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து லிட்டர் 97.91 ரூபாய்க்கும், டீசல் விலை 12 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* டேராடூன் மருத்துவமனையிலிருந்து சிவசங்கர் பாபா தப்பியோட்டம்.
பாலியல் வழக்கில் விசாரணை செய்ய தமிழக போலீசார் டேராடூன் சென்ற நிலையில் தப்பியோட்டம்.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சிவசங்கர் பாபா.
* டுவிட்டர் நிறுவனத்திற்கான சட்ட பாதுகாப்பை விலக்குகிறது மத்திய அரசு.
தனி நபர் கருத்தும் டுவிட்டர் கருத்தாகவே இனி பார்க்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை மத்திய அரசின் விதிமுறைகளை ஏற்ற நிலையில், டுவிட்டர் ஏற்க மறுத்தது.
💥அரியலூரில் 10 இடங்களில் Hydrocarbon எடுக்க அனுமதி வேண்டி ONGC நிறுவனம் தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம்
* யூடியூபர் மதனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 159 புகார்கள்!
பப்ஜி விளையாட்டினைப் பயன்படுத்தி ஆபாசமாகப் பேசியதாக யூ ட்யூபர் மதன் மீது தமிழகமெங்கும் கிட்டத்தட்ட 159 புகார்கள் குவிந்துள்ளன.
பப்ஜி விளையாட்டு மூலம் தனியாக சாட்டிங் செய்து சிறுமிகளிடமும், பெண்களிடமும் ஆபாசமாக பேசிய யூடியூபர் மதன் மீது பல்வேறு. இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. மதன் குறித்து தற்போது புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மதனை தேடி வருகிறார்கள்.
மதன், சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்ததால் சென்னை தனிப்படை போலீசார் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மதன் மீது பல்வேறு மாவட்டங்களில் இருந்து 159 புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு ஆன் லைன் மூலமாக வந்துள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* ஒரே ஒரு மூவ்... சரிந்த கோக்கோ கோலா!
செய்தியாளர் சந்திப்பின்போது பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோக்கோ கோலா பாட்டிலை ஒதுக்கி வைத்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டதால் கோக்கோ கோலா நிறுவனத்திற்கு சுமார் ரூ. 29,337 கோடி (4 பில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பு என தகவல்!
💥இந்தியாவில் முடக்கப்படுமா டுவிட்டர் தளம்?!
புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க, பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும் டுவிட்டர் நிறுவனம் அதை தவறிவிட்டது.
டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் இந்திய சட்டங்களை பின்பற்றுவதில் ஏன் தயங்குகின்றன?
:நடுவண் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி!
💥கொரனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு உதவி தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இத்தொகை குழந்தைகளின் பெயரில் வைப்பு தொகையாக வங்கியில் செலுத்தப்படுகிறது
* சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஐதராபாத் நீதிமன்றத்திலும் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது - இயக்குனர் சங்கர்.
இந்தியன் 2 படத்தை முடிக்காமல் பிற படங்களை இயக்க தடைகோரி லைகா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இயக்குனர் சங்கர் புகார்.
* இந்திய பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க வழிவகுக்கும் முதல் நடவடிக்கையாக, சரக்கு ரயில் வழித்தடத்தில் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் சோதனையில் இந்திய ராணுவம் வெற்றி கண்டுள்ளது.
சரக்குப் போக்குவரத்தை விரைவில் மேற்கொள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தை இந்திய ரயில்வே சமீபத்தில் உருவாக்கியது. பாதுகாப்பு படைகளின் போக்குவரத்து திறனை அதிகரிக்க, பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட கார்ப்பரேஷன், இந்திய ரயில்வே மற்றும் இந்திய ராணுவத்துக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த சரக்கு ரயில் வழித்தடத்தில், நியூ ரெவாரியிலிருந்து, நியூ புலேரா வரை ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை ரயிலில் ஏற்றி இந்திய ராணுவம் பரிசோதனை மேற்கொண்டது. இது வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இதன் மூலம், இந்திய பாதுகாப்பு படைகளின் போக்குவரத்தில், பிரத்யேக சரக்கு ரயில் பாதை மற்றும் அதன் துணை கட்டமைப்பின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும். மேலும், பாதுகாப்பு படைகளின் போக்குவரத்துக்கு உதவ சில இடங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்தி, ராணுவ ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
'இந்தப் பரிசோதனைகள், பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க வழிவகுக்கும் முதல் நடவடிக்கை. இந்த முன்முயற்சி, திட்டமிடல் காலத்திலேயே, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில், ராணுவத் தேவைகளும் இணைந்துள்ளதை உறுதி செய்வதற்கான நடைமுறையை ஏற்படுத்தும்' என, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
* 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
* சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அற்புதம்மாள்.
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை.
பேரறிவாளனை விடுவிக்கும் எண்ணத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது - அற்புதம்மாள்.
* பாலியல் வழக்கில் சிவ சங்கர் பாபா டெல்லியில் கைது. டேராடூனில் இருந்து தப்பியோடிய நிலையில் டெல்லியில் கைது.
* முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோதியை நாளை சந்திக்கிறார் முக ஸ்டாலின்
இதன்காரணமாக முக்கிய தமிழக அமைச்சர்கள் தில்லியில் முகாமிட்டு உள்ளனர்.
💥சிறார் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியின் ஏற்பளிப்பை திரும்பப் பெற தமிழக அரசுக்கு குழந்தைகள் நல குழுமம் பரிந்துரை.
* வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு.
உயிரியல் பூங்காவில் மொத்தம் 10 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இறந்த ஆண் சிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என அதிகாரிகள் ஆய்வு.
* தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சீத்தாலட்சுமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இணை ஆணையராகவும், காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த மகேஷ்வரி ரவிக்குமார், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு செயலாக்கத்துறையின் முதன்மை செயலாளராக விபு நாயர், சமூக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கமல்கிஷோரை நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஆகியோரை நியமனம் செய்து உத்தரடவிட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,448 பேருக்கு கொரோனா உறுதி.
இன்று 270 பேர் உயிரிழப்பு.
21,058 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
No comments:
Post a Comment