அக்னிப்புரட்சி இன்றைய (17.06.2021) முக்கிய செய்திகள்.
* பாலியல் வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்
எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு சிவசங்கர் பாபா அழைத்துச் செல்லப்படுகிறார்
இன்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல்
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.97.91 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.92.04 க்கும் விற்பனை.
* 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை.
மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் சென்னை வந்தது.
தமிழகத்திற்கு இதுவரை 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ளன.
* நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வரும் 23ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ, neetimpact2021@gmail.com என்ற இமெயில் வழியாகவோ தங்களது கருத்துக்களை அனுப்பலாம் - நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி.
* 12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து - மதிப்பெண் வழங்கும் திட்டம் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தாக்கல்.
மதிப்பெண் வழங்கும் திட்டம் குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் விளக்கம்.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.
11-ஆம் வகுப்பு பாடங்களில் 30% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.
12-ஆம் வகுப்பு பாடங்களில் 40% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.
செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
* தொரட்டி படத்தின் நாயகன் ஷமன் மித்ரு கொரோனா வெருவித் தொற்றினால் உயிரிழந்தார்
* காலியாக உள்ள பேராசிரியர், பணியாளர் விவரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC ஆணை
NET, SET, Ph.D., முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறும் பொருட்டு நடவடிக்கை.
💥தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?
நடைமுறைப்படுத்த ஆய்வு செய்து வருவதாக தமிழக அரசு தகவல்!
* தில்லியில் பிரமாண்டமாக அமைக்கப்பெறும் திமுக கட்சி அலுவலக கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டார்
* டெல்டா மாவட்ட விவசாயிகள் நலனுக்கு ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
குறுவை நெல் சாகுபடி திட்டத்தின் மூலம் 2.7 லட்சம் விவசாயிகள் பயனடைவர் - முதலமைச்சர்.
* ICube என்கிற பெயரில் மின் ஊர்தியை சென்னையில் அறிமுகம் செய்கிறது TVS நிறுவனம்
* பதிவேற்றப்பட்ட யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கிறது. அவற்றை முழுமையாக கேட்டுவிட்டு முன் பிணை வழக்கில் வாதிடும்படி மதன் தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை
💥தமிழகம் முழுவதும் மின் தடை ஏற்படும்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும், முன் அறிவிப்புடன் கூடிய மின் தடை ஏற்படும் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
* நீர் நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது:
நீர் நிலைகளை சிதைக்காமல் காக்க வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழக நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய மேலும் 3 வாரங்கள் அவகாசம்.
ஈரோடு பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.
* வரும் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்ற பேரவை கூட்டம் தொடங்குகிறது.
சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நாளை முதல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
* இந்தியாவில் பெங்களூரு, மும்பை, சென்னை உள்ளிட்ட மேலும் 9 நகரங்களில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைக்கும் - டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம்.
ஏற்கனவே ஐதராபாத்தில் மட்டும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைத்து வந்த நிலையில் புதிய ஏற்பாடு.
* விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை உருவாக்க திட்டம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
நெல் கொள்முதலுக்காக 468 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளது.3.34 லட்சம் டன் நெல் பாதுகாக்க முடியும் - தமிழக அரசு.
* பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு:
முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக பிரதமரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.
பிரதமர் மோடியிடம் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன், எய்ம்ஸ், ஜி.எஸ்.டி குறித்தும் பிரதமருடன் ஆலோசிக்க வாய்ப்பு.
பிரதமர் மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையே 25 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது.
* பிரதமரை சந்தித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு:
25 கோரிக்கைகளை வலியுறுத்தி 25 மணித்துளி சந்திப்பு நடைபெற்றது
பிரதமர் உடனான சந்திப்பு மனநிறைவை தந்துள்ளது
வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க பிரதமர் நரேந்திர மோதி ஒப்புதல் தெரிவித்துள்ளார்
ஈழ அகதிகளுக்கு குடியுரிமை கோரப்பட்டுள்ளது!
சென்னை நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்மொழி இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க நடுவண் அரசுக்கு கோரிக்கை
"எழுவர் விடுதலை" குறித்த கோரிக்கை முதலமைச்சர் முக ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட இன்றைய விண்ணப்பத்தில் இடம்பெற வில்லை
சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.
நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்தேன்.
உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வகையில் சந்திப்பு அமைந்தது.
பிரதமர் உடனான சந்திப்பு பற்றி தமிழ்நாடு இல்லத்தில் மு.க ஸ்டாலின் விளக்கம்.
3 வேளாண் திட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
* திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ப.காயத்திரி கிருஷ்ணன் இ.ஆ.ப அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதவியேற்றார்.
* தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற முந்தைய அரசின் தகவல் தவறானது
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
* தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் நடவடிக்கையாக 33 கோடி மரங்கள் நடுவதற்கு வனத்துறை திட்டம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிலப்பகுதியில் குறைந்தபட்சம் 33% காடுகள் உருவாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருந்தது.
* பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்கும் நடுவண் மேல்நிலை கல்வி வாரியத்தின் (CBSE) திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்
அதன்படி,
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.
11-ஆம் வகுப்பு பாடங்களில் 30% முதன்மைத்துவ மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.
12-ஆம் வகுப்பு பாடங்களில் 40% முதன்மைத்துவ மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.
செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
இதனையடுத்து சூலை 31 க்குள் மதிப்பெண்கள் மற்றும் முடிவுகள் வெளியாக உள்ளன
💥10 ஆண்டு காலம் இல்லாத மின்வெட்டும், கருத்து உரிமை மீறலும் ஒரு மாத கால திமுக ஆட்சியில் தலை விரித்தாடுகிறது
அதிமுக நுரை பூ அல்ல, ஊதி விளையாட; நெருப்பில் பூத்த மலர்
முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி- ஓ பன்னீர்செல்வம் கூட்டறிக்கை.
💥தமிழ்நாட்டில் கொரோனா வெருவித் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
இன்று மட்டும் 9,118 பேருக்கு பாதிப்பு
210 பேர் உயிரிழப்பு
22,720 பேர் மீண்டனர்
💥அரியலூர் மாவட்டத்தில் Hydrocarbon திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
* சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்தை கைவிடக் கோரியும் பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் முக ஸ்டாலின் அளித்த கோரிக்கை படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தமிழக அரசு விளக்கம்
* டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நாளை தொடங்குகிறது.
இதில் விளையாடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
சுழற்பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
வேகப்பந்துவீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி ஆகியோர் விளையாடுகின்றனர்.
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், சேத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்பிரீத் பூம்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.
No comments:
Post a Comment