ஓமந்தூரார் வெளிப்படுத்திய மக்கள் நலனும்... இன்றைய அரசு காக்கும் மது ஆலை நலனும்! - மருத்துவர் இராமதாசு அய்யா.
அன்று - மதுவை ஒழித்த ஓமந்தூரார்
தமிழ்நாட்டின் முதலமைச்சர்களில் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் யார்? என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தான் என்று கூறிவிடலாம்.
காரணம்....
இந்திய வரலாற்றில் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திலும் மதுவிலக்கை கொண்டு வந்தவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தான். 1948-ஆம் ஆண்டில் அவர் மதுவிலக்கை கொண்டு வந்தபோது அரசுக்கு ரூ.18 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறினார். ஆனால், ஆண்டுக்கு ரூ.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை; அதற்காக மதுவிலக்கை கைவிட மாட்டேன் என்று உறுதிபட கூறினார். அப்போது அவர் கொண்டு வந்த மதுவிலக்கு தான் 1971-ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. அந்த மதுவிலக்கைத் தான் 1971-ஆம் ஆண்டில் கலைஞர் அரசு நீக்கியது.
இன்று- மதுவை விற்று நிர்வாகம் செய்யும் அரசாங்கம்
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனாவால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் இன்னும் கூடுதலாக மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என்று கூறி மதுக்கடைகளை திறந்து விட்டிருக்கிறது தமிழக அரசு.
அதன்மூலம் மாதத்துக்கு ரூ.5000 கோடிக்கு மது விற்பனை நடக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதுவும் போதாது என்று மதுப்புட்டிகளின் விலைகளை 25% & 30% வரை உயர்த்த முடிவு செய்திருக்கிறதாம் தமிழக அரசு. மதுவை விற்று நிர்வாகம் செய்பவர்களுக்கு மக்கள் நலனைப் பற்றி என்ன தெரியும்?
No comments:
Post a Comment