அக்னிப்புரட்சி இன்றைய (19.06.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.06.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.06.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.98.14 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.92.31 க்கும் விற்பனை.

* மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க வாய்ப்பு.

* மீண்டும் தொடங்குகிறது சிறப்பு ரயில்கள் சேவை

பயணிகள் வரத்துக் குறைந்ததால், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட 10 ஜோடி சிறப்பு ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கவுள்ளன.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட சில சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. தற்போது, தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளநிலையில், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட சிறப்புரயில்களின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளன. அந்தவகையில், சென்னை எழும்பூா்-தஞ்சாவூா் சிறப்பு ரயில் உள்பட 10 ஜோடி சிறப்பு ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கவுள்ளன. அதன் விவரம்:

சென்னை எழும்பூா்-தஞ்சாவூா் சிறப்பு ரயில் சேவை (06865) ஜூன் 20-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தஞ்சாவூா்-சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் சேவை ( 06866) ஜூன் 21-ஆம் தேதி தொடங்குகிறது.

சென்னை எழும்பூா்-கொல்லம் சிறப்பு ரயில் (06101) ஜூன் 20-ஆம் தேதிமுதலும், கொல்லம்-சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06102) ஜூன் 21 -ஆம் தேதி முதலும் இயக்கப்படவுள்ளன.

சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (02695) ஜூன் 20-ஆம் தேதிமுதலும், திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்(02696) ஜூன் 21-ஆம்தேதிமுதலும் இயக்கப்படவுள்ளன.

சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை (02671) ஜூன் 20-ஆம் தேதியில் இருந்தும், மேட்டுப்பாளையம்-சென்னை சென்ட்ரல் சிறப்புரயில் சேவை (02672) ஜூன் 21-ஆம் தேதியில் இருந்தும் தொடக்கவுள்ளன.

சென்னை எழும்பூா்-திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் (02653) ஜூன் 21 முதலும், திருச்சிராப்பள்ளி-சென்னை எழும்பூா் சிறப்புரயில் (02654) ஜூன் 20 முதலும் இயக்கப்படவுள்ளன. சென்னை எழும்பூா்-ராமேசுவரம் சிறப்பு ரயில் (06851), ராமேசுவரம் -சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06852) உள்பட 10 ஜோடி சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படவுள்ளன.

💥இந்திய சட்டமே உயர்வானது உங்கள் (டுவிட்டர்) கம்பெனி சட்டமல்ல!

: டுவிட்டர் மேலாண் அலுவலர்களை கேள்விகளால் வறுத்தெடுத்த  நாடாளுமன்ற குழு

💥"பறக்கும் சீக்கியர்" என்றழைக்கப்படும், இந்தியாவின் மின்னல் வேக ஓட்டபந்தய வீரர் கொரோனா தொற்று காரணமாக  மில்கா சிங் நேற்றிரவு இயற்கை எய்தினார்

முதன்முதலாக ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்று தந்தவர்...

டோக்கியோ ஆசிய பதக்க விளையாட்டு போட்டியில் பாகிஸ்தானின் அப்துல் காலிக்கை தோற்கடித்து தங்கம் வென்ற இந்திய வீரர் மில்கா சிங் புகைப்படம்...

திருத்தம்:- மில்கா சிங் உச்சபட்சமாக காமன்வெத் மற்றும் ஆசிய போட்டிகளில் தான் பதக்கம் பெற்றுள்ளார். மில்கா சிங் இதுவரை ஒலிம்பிக் பதக்கம் பெற்றதில்லை. இந்தியாவின் 125 வருட சரித்திரத்தில் இதுவரை அத்லடிக்ஸ் என்று சொல்லப்படும் தடகள போட்டிகளில் ஒரு ஒலிம்பிக் பதக்கம் கூட வென்றதில்லை.

* திருக்குறளை பாடமாக அறிமுகம் செய்கிறது சென்னைப் பல்கலைக்கழகம்

"தொழில் தர்மத்துக்கான திருக்குறள்" என்ற பெயரில் இளநிலை மாணவர்களுக்கு மட்டும் நடப்பு கல்வியாண்டிலேயே திருக்குறள் பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

* பெண்களுக்கு அதிகாரத்தில் வாய்ப்பளித்துள்ள ஸ்டாலின்!

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு பெண் ஆட்சியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

* கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.

1 முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

2021-22-ம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

* மீண்டு வந்த எரிக்சன்!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது நிலை தடுமாறிய தென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

💥யூ ட்யூபர் மதனிடம் ஏமாந்தவரா நீங்கள்?

மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் dcpccb1@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியில் குற்றச்சாட்டு பதியலாம் என காவல்துறை அறிவிப்பு

* பேருந்து சேவை - மருத்துவ குழு பரிந்துரை.

தொற்று அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம்.

முதலமைச்சர் உடனான ஆலோசனையில் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை.

50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவையை அனுமதிக்க பரிந்துரை.

நோய் தொற்று குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வு அளிக்க வேண்டாம்

தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், Malls திறக்கலாம்

வணிகர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கலாம்

என தமிழக அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை

💥கொரோனா வெருவிப் பரவலின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும்  என்று கூறப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கான மருத்துவ முறைகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ICMR

* மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் தன்னிச்சையான கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

உழவர்களின் வாழ்வாதாரத்தை காக்க உரியை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வலியுறுத்தல்

* தமிழகத்தில் TASMAC கடைகளை மூட கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் உட்பட 120 பேர் மீது வழக்கு பதிவு

* நடுவணிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது விட்டுவிட்டு, இப்போது NEET தேர்வு குறித்து பேசுவது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதற்கு ஒப்பானது: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை

* 12 ஆண்டு பள்ளிக்கல்வி பயின்ற பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர் கல்விக்கு செல்ல முடியும் என்பது சமூக அநீதி- நடிகர் சூர்யா.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.

பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்.

ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது- நடிகர் சூர்யா.

மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை.

கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம்.

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - நடிகர் சூர்யா

* மேகதாது அணை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்- டாக்டர் ராமதாஸ்.

மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட திருமாவளவன் வலியுறுத்தல்.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: இந்திய அணி பேட்டிங்.

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பந்து வீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்கிறது.

* யூடுயூபர் மதனுக்கு சூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
சைதாபேட்டை நீதிமன்றம்

* கொரோனா 3-வது அலை அடுத்த 6 முதல் 8-வது வாரங்களில் தாக்கக்கூடும்: எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை.

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை அடுத்த 6 முதல் 8 -ஆவது வாரங்களில் தாக்கக் கூடும் என்றும், கொரொனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளில் எந்தவிதப் பாடமும் மக்கள் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

* உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதி பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி, அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

💥 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது:

புனேவிலிருந்து விமானம் மூலம் 3,10,150 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.

💥 தமிழ்நாட்டில் இன்று 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மேலும் 18,232 பேர் குணமடைந்துள்ளனர்.

💥தெலங்கானா மாநிலத்தில் நாளைமுதல்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவிப்பு

கொரோனா வெருவிப் பரவல்  கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் இந்த முடிவு என விளக்கம்

* கொரோனா வெருவித் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழக்கும் நபர்களின் தெளிவான விவரங்கள் வழங்கப்படாததால் இறப்பு & வாரிசு சான்றுகள் வாங்க உற்றார், உறவினர்  சிரமப்படுவதை தவிர்க்க தலைமை செயலர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்

* கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (20-06-2021) ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் 41 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

💥நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நாளை (20/06/2021) நடைபெற உள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்கள் விபரம்

கோவிசீல்ட் மட்டும் ( COVISHIELD ):

1 டோஸ் & 2 டோஸ் அனைவருக்கும்   

    ✓இந்துக்கல்லூரி
    ✓ டதி பள்ளி
    ✓கவிமணி பள்ளி
    ✓ஸ்காட் கல்லூரி
    ✓கேந்திரிய வித்யாலயா

அனைத்து மையங்களிலும் இருப்பு 500 டோஸ்.

டோக்கன் வழங்கும் நேரம் : 8:30 AM

தடுப்பூசி போடும் நேரம் : 9:30 AM

குறிப்பு:

நாளை காலை 8:30 மணிக்கு அனைத்து மையங்களிலும் டோக்கன் வழங்கப்படும்.

டோக்கன் பெற்றவர்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.

ஆகையால் பொதுமக்கள் காலை உணவை சாப்பிட்ட பிறகு அல்லது உணவை எடுத்துக்கொண்டு தடுப்பூசி முகாம்களுக்கு வரவும்.

* கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் 20-06-2021 நாளை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ்  தடுப்பூசி போடப்படும் இடங்கள்

1. கார்னேஷன் மருத்துவமனை -  100 நபர்கள் (கோவாக்சின் 2-ம் டோஸ்)

2. தாராசுரம் காய்கறி சந்தை தொழிலாளர்கள் - 150 நபர்கள் (கோவிஷீல்டு 2-ம் டோஸ்) 

3.  மருந்து விற்பனை நிகராளர்கள்  - 150 நபர்கள் (கோவிந்தன் மஹால்)         

4. பெரிய பள்ளி வாசல்  - 50 நபர்கள்

5. கம்பன் நகர் - 50 நபர்கள் (முன் களப்பணியாளர்கள் )

* சசிகலாவுக்கு எதிராக சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

* 8-9 மாவட்டங்களில் தளர்வுகளுக்கு வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தொற்று விகிதப்படி முதலிடத்தில் கோயம்புத்தூர், அடுத்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், இராணிப்பேட்டை, சேலம், அரியலூர், நாமக்கல், சிவகங்கை, கடலூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராமல் உள்ளது. தொற்று விகிதம் 5 க்கு கீழ் வருவதே பாதுகாப்பானது என வல்லுநர்கள் கூறும் நிலையில் நேற்றைய தேதியில் 7 நாள் நிலவரப்படி  தொற்று பரவல் 15 மாவட்டங்களில் இன்னும் கடுமையான கட்டத்தில் தான் இருப்பதாக அறிய முடிகிறது.

* மகளிர், மாற்றுத்திறனாளி,  மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளியின் உதவியாளர் ஆகியோருக்கான பேருந்து பயணச்சீட்டின் மாதிரி வெளியீடு

* இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவது நாட்டிலேயே சென்னை முதலிடம் வகிக்கிறது சென்னை மாநகராட்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

💥B.Ed., M.Ed., தேர்வு வரும் 28-ம் தேதி இணைய வழியில் தொடங்குகிறது

தேர்ச்சி நிலுவை வைத்துள்ள  மாணவர்களுக்கும் சூன் 28-ல் தேர்வு தொடக்கம்.

:ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தம்.

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2ம் நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, இந்திய அணி, 3 விக்கெட் இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளனர்.

* தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள்...

1. அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மண்டபம் (அனைவருக்கும்)

2. கந்த சரஸ் மஹால் (ஆசிரியர்கள் பேராசிரியர்கள்)

3. கரந்தை மாநகராட்சி பள்ளி (அனைவருக்கும்)

4. வண்டிக்கார தெரு மாநகராட்சிப் பள்ளி மற்றும் அண்ணா நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி (அனைவருக்கும்)

5. தஞ்சை ரயில் நிலையம் ஆர் எம் எஸ் வளாகம் (அலுவலர்கள் பணியாளர்கள்)

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages