அக்னிப்புரட்சி இன்றைய (24.06.2021) முக்கிய செய்திகள்
* உலக டெஸ்ட் சாம்பியன்; நியூசிலாந்து வெற்றி:
உலக டெஸ்ட் சாம்பியன் பைனலில் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
* சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து லிட்டர் 98.88 ரூபாய்க்கும், டீசல் விலை 6 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.89 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ்.
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளும் ரத்து. சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* 12ஆம் வகுப்பு மாநில பாடத் திட்ட பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
* இன்று மாலை அமைச்சரவை கூட்டம்:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும்- தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
* மத்திய அரசின் சிறு துறைமுகங்களுக்கான திருத்த மசோதாவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு.
மத்திய இணை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற கடல்சார் மேம்பாட்டு கூட்டத்தில், புதிய சட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எதிர்ப்பு.
* ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பை வழங்குவதற்கான கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை - உணவு பொருட்கள் வழங்கல் துறை.
கொரோனா நிவாரண நிதி ரூ 2,000 பெறுவதற்கும் கால நிர்ணயம் செய்யப்படவில்லை - உணவுப்பொருட்கள் வழங்கல் துறை.
💥சென்னை புறநகர் மின்சார தொடரிகளில் நாளை முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டும் ஆண்கள் பயணிக்க அனுமதி!
அதிகாலை முதல் 7 மணி வரை- 9.30 முதல் 4.30 வரை - 7 மணி முதல் இரவு வரை பயணிக்காலம்.
பெண்கள், அவர்களுடன் பயணிக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் பயணம் செய்ய அனுமதி
* அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள். திமுக அடக்க முடியாத யானை! : சட்டப்பேரவையில் முதலமைச்சர்
யானைக்கு 4 கால்கள் தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூகநீதி, மொழிப்பற்று, தன்மானம் , மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம். - : முதல்வர் முக ஸ்டாலின்
* கடந்த ஆட்சியில் ஊடக மற்றும் இதழியலாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு
💥தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
* ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகபட்ச மின்சாரத் தேவையை சீராய்வு செய்ய தவறியதால் 6 அரசு மருத்துவமனைகளும், அண்ணா நூற்றாண்டு நூலகமும் 2016-2019இல் ₹7.07 கோடி மின் கட்டணம் & தண்டமாக செலுத்த நேரிட்டது
:இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை
* ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது.
ஆளுநர் உரை முன்னோட்டம்தான் அதாவது ஆளுநர் உரை TRAILER தான்.
முதலமைச்சர் முக ஸ்டாலின்
* சேலம் ஆத்தூரை தொடர்ந்து தென்காசியில் காவல்துறை தாக்கியதால் 50 வயது நபர் உயிரிழந்ததாக அவரது மகள் செல்பேசி கோபுரம் மீது ஏறி நின்று நீதி கோரி போராட்டம்!
பிரான்சிஸ் அந்தோணி என்ற அந்த நபர் நியாய விலைக் கடைக்கு சென்று அரிசி வாங்கி வரும் வழியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
* கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டுத்தயாரிப்பில் உருவாகியுள்ள JioPhone Next - 5G தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட்போன் செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது: முகேஷ் அம்பானி.
* காஷ்மீர் விவகாரம் தொடர்பான நடுவண் அரசு - எதிர்க்கட்சிகளின் கூட்டம் நிறைவடைந்தது
தொகுதி வரையறைக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நடுவண் அரசு தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிக்கு மீண்டும் மாநில தகுதி வழங்குவதாக முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி உறுதியளித்துள்ளதாகவும் தகவல்
குடிமைப் பணியில் அலுவலர்கள் உமா மகேஸ்வரி மற்றும் கிரண் குராலா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராகவும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்
💥11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது
மதுரை AIIMS-ல் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்து நடுவண் அரசு முடிவெடுக்க வேண்டும்.
மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
* முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
திமுக ஆட்சி அமைந்ததும் 2-வது முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு என தகவல்.
டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு.
💥 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,162 பேருக்கு கொரோனா உறுதி.
இன்று ஒரே நாளில் 155 பேர் உயிரிழப்பு.
கொரோனாவில் இருந்து 9,046 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,000-க்கும் கீழே குறைந்தது.
சென்னையில் 372 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோவையில் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
💥பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், அவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களை சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுகள் இயக்ககம் ஆணை
💥 கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளை (25.06.2021) பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது என மாநகராட்சி அறிவிப்பு
💥 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் COVAXIN தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
💥 சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் (25.06.2021) நாளைய தடுப்பூசி முகாம்!
No comments:
Post a Comment