அக்னிப்புரட்சி இன்றைய (25.06.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.98.88 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.92.89 க்கும் விற்பனை.
* கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது.
சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்க அனுமதி.
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி.
* ஊரடங்கு தளர்வு குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது
மதிப்பெண் கணக்கீட்டுக்கான வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு, தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கியுள்ளது.
10, 11 பொதுத் தேர்வு முடிவுகள் மற்றும் 12 ம் வகுப்பு Internal அடிப்படையில் மதிப்பெண் வழங்க வாய்ப்பு என தகவல்.
* கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளராக உதயசூரியன் நியமனம்
* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபர்கள்,
சூலை 31-ம் தேதிக்குள் auvcnodalofficer@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
தேடல் குழு அறிவிப்பு
* பாலிடெக்னிக் சேர்கை - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
2021-22 ஆம் ஆண்டிற்கான பாலிடெக்னிக் முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதி நேர மாணவர் சேர்க்கைக்கு tngptc.in என்ற இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம்.
* தமிழகத்தில் சிறைக் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்:
சென்னை புழல் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம்.
கடலூர் சிறைக் கண்காணிப்பாளர் நிஜிலா நாகேந்திரன் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்.
மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமனம்.
* டி.ஆர்.டி.ஓ. கண்டுபிடித்த 2டிஜி குளுக்கோஸ் கொரோனா தடுப்பு மருந்து எப்போது சந்தைக்கு வரும்?
ஆந்திராவின் ஆனந்தய்யா ஆயுர்வேத மருந்துக்கு எப்போது அங்கீகாரம் அளிக்கப்படும்? - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
2டிஜி குளுக்கோஸ் மருந்தை தயாரிக்க முன் வந்துள்ள 40 நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; ஆனந்தய்யாவின் மருந்தை ஐ.சி.எம்.ஆர். ஆய்வு செய்து வருகிறது - மத்திய அரசு பதில்.
அரை மணி நேரத்தில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை அளிக்கின்ற ஆந்திராவின் ஆனந்தய்யாவை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் அழைத்து, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா? - நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அமர்வு கேள்வி.
சர்வதேச மருந்து மாபியாக்கள் காரணமாக ஆனந்தய்யாவின் மருந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை; அங்கீகாரம் வழங்கியிருந்தால் சர்வதேச அளவில் புகழடைந்திருப்பார் - நீதிபதிகள்.
* கிஷோர் கே சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
சமுக வலைதளங்களில் அவதூறு கருத்து; செங்கல்பட்டு சிறையில் உள்ள கிஷோர் கே சாமி மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்தது.
💥தமிழகத்தில் மெல்லப்பரவும் ∆+ தொற்று!
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவருக்கு ∆+ கொரோனா வெருவித் தொற்று உறுதியாகியுள்ளதாக அரசு தகவல்
* ஏழை பாட்டியின் அழகான சிரிப்பை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் ஜேக்சன் ஹெர்பியை நேரில் வரவழைத்து பாராட்டினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
* தமிழகத்திற்கு 33.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு.
ஜூன், ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.
* முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின் மறுப்பு:
துணை நடிகை புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
* மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டர் கணக்கு முடக்கம்:
அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாகக் கூறி டுவிட்டர் தனது கணக்கை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடக்கி வைத்ததாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
காப்புரிமை விதிகளை மீறியதால் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
* பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது:
பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரான
ராஜகோபாலன் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் சிறையில் உள்ளார்.
* நாடு முழுவதும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று- மத்திய அரசு.
11 மாநிலங்களில் 48 பேருக்கு இதுவரை டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 20 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி-மத்திய அரசு.
தமிழ்நாட்டில் 9 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதி.
தமிழகத்தில் 9 பேருக்கு ∆+ வெருவித் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நடுவண் அரசு தகவல்
* திருவண்ணாமலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பில், வெற்றி பெற்றவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு, அடுத்தமாதம் 25 ஆம் தேதி சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
💥 ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
தமிழ்நாட்டில் மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
"வகை 1" இல் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் துணிக் கடைகள் வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி
தொற்று குறையாத கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு; டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியில்லை.
கோவை, நீலகிரி,ஈரோடு, சேலம், கரூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் டீக்கடைகள், வீட்டு உபயோக மின்சார கடைகள், போட்டோ, வீடியோ ஜெராக்ஸ் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம்.
23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.
23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளிகடைகள் திறக்க அனுமதி.
4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கும், வணிக வளாகங்களுக்கும் , உணவகங்களில் பார்சல்களுக்கும் அனுமதி.
11 மாவட்டங்களில் தியேட்டர்கள் வட்டாட்சியர் அனுமதி பெற்று பராமரிப்பு பணி செய்யலாம்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க நிறுவனங்களுக்கு அனுமதி.
11 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
23 மாவட்டங்களில் திருமண இ பதிவு தேவையில்லை.
23 மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.
27 மாவட்டங்களில் கடற்கரையில் நடைபயிற்சிக்கு அனுமதி.
11 மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் பிற மாவட்ட திருமணத்திற்கு செல்ல இ பதிவு பெற்றிருக்க வேண்டும்.
* புதுச்சேரி அமைச்சரவை பட்டியல் வெளியீடு:
புதுச்சேரியில் 15 வது சட்டப்பேரவைக்கு புதிய அமைச்சர்கள்
நமச்சிவாயம் (பாஜக), லெட்சுமிநாராயணன் (என்.ஆர்.காங்கிரஸ்), தேனி ஜெயக்குமார் (என்.ஆர்.காங்கிரஸ்), சந்திர பிரியங்கா (என்.ஆர்.காங்கிரஸ்), சாய்சரவணன் (பாஜக) ஆகிய 5 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதாக குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அரசிதழ் வெளியீடு.
💥M.Phil., படிப்பு நடப்பு கல்வியாண்டில் முதல் கைவிடப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.
ஏற்கனவே M.Phil., படிப்பில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பயிலலாம் எனவும் அறிவிப்பு
* கும்பகோணம் நகராட்சி பகுதியில் நாளை (26.06.2021) 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும் இடங்கள்:
காலை 10:00 மணியளவில்.
1.அல் அமீன் பள்ளி - 100 நபர்கள்
2.பானாதுறை நகராட்சி பள்ளி - 100 நபர்கள்
3.13வது வார்டு - ஆதி நந்தவன மாரியம்மன் கோயில் - 100 நபர்கள்
4. வார்டு 45 - சங்கமம் மஹால் -100 நபர்கள்
5.மோதிலால் தெரு - A.M.கல்யாண மண்டபம் - 100 நபர்கள்
* கும்பகோணம் கிராமப் பகுதிகளில் நாளை 26-06-2021 அன்று கோவிசீல்டு தடுப்பூசி செலுத்தும் இடங்கள்…
1. பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம் - 50,
2. சேஷம்பாடி பஞ்சாயத்து - 50,
3. சுவாமிமலை ஆரம்ப சுகாதார நிலையம்-50,
4. ஏரகரம் பஞ்சாயத்து - 50,
5. கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையம்- 50,
6. வாளபுரம் பஞ்சாயத்து-50,
7. சோழபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்-50,
8. மணஞ்சேரி-50,
9. சுந்தரபெருமாள்கோயில் ஆரம்ப சுகாதார நிலையம்-50,
10. மணப்படை யூர்-50
💥கல்வித் தொலைக்காட்சியைத் தொடர்ந்து கல்வி வானொலி!
இணைய வழியில் நடத்தப்படும் "Kalvi Radio" கல்வி வானொலியிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் ஒளிபரப்பாகிறது.
💥முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை DGP கந்தசாமி சந்திப்பு.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்தாய்வு என தகவல்.
No comments:
Post a Comment