தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. - Agnipuratchi

தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

Share This

தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

தமிழ்நாட்டில் மேலும் சில  கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி  உள்ளிட்ட  23 மாவட்டங்களில் பொது  போக்குவரத்துக்கு அனுமதி

"வகை 1" இல் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் துணிக்  கடைகள்   வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட  அனுமதி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி

தொற்று குறையாத கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு; டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியில்லை.

கோவை, நீலகிரி,ஈரோடு, சேலம், கரூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் டீக்கடைகள், வீட்டு உபயோக மின்சார கடைகள், போட்டோ, வீடியோ ஜெராக்ஸ் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம்.

23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.

23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளிகடைகள் திறக்க அனுமதி.

4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கும், வணிக வளாகங்களுக்கும் , உணவகங்களில் பார்சல்களுக்கும் அனுமதி.

11 மாவட்டங்களில் தியேட்டர்கள் வட்டாட்சியர் அனுமதி பெற்று பராமரிப்பு பணி செய்யலாம்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க நிறுவனங்களுக்கு அனுமதி.

11 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

23 மாவட்டங்களில் திருமண இ பதிவு தேவையில்லை.

23 மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

27 மாவட்டங்களில் கடற்கரையில் நடைபயிற்சிக்கு அனுமதி.

11 மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் பிற மாவட்ட திருமணத்திற்கு செல்ல இ பதிவு பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages