அக்னிப்புரட்சி இன்றைய (26.06.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.06.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.06.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து லிட்டர் 99.19 ரூபாய்க்கும், டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து லிட்டர் 93.23 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தின் அடுத்த காவல்துறையின் தலைவராக சைலேந்திர பாபு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* புகழ்பெற்ற CEOWORLD இதழ் வெளியிட்ட  உலகின் தலை சிறந்த 100 மருத்துவக்  கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த  மதராஸ் (சென்னை)  மருத்துவக் கல்லூரி (MMC), வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி ஆகியவை  இடம் பிடித்து சாதனை!

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 6 மருத்துவக் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன

புதுதில்லி AIIMS  - 23 வது இடம்

புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி  - 34

கிறித்துவ மருத்துவ கல்லூரி வேலூர் -  49

புதுச்சேரி JIPMER  - 59

மதராஸ் மருத்துவக் கல்லூரி (MMC) - 64

பனாரசு இந்து பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி வாரணாசி -  72

இந்த பட்டியலில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே கல்லூரி MMC மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

https://ceoworld.biz/2021/03/21/best-medical-schools-in-the-world-for-2021/

* உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையை பெட்ரோல் விலை நீக்கிவிட்டது.

இந்த நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை - ப.சிதம்பரம்.

* முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரை விசாரிக்க 3-வது  நீதிபதி நிர்மல்குமார் நியமனம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீர‌ர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும்.

வெள்ளி பதக்கம் வென்றால் ரூ.2 கோடியும், வெண்கல பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* "6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.

சென்னையில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages