மருத்துவர் காமேஸ்வரன் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல் - Agnipuratchi

மருத்துவர் காமேஸ்வரன் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்

Share This

மருத்துவர் காமேஸ்வரன் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்

புகழ்பெற்ற மருத்துவரும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்க பாடுபட்டவர்களில் ஒருவருமான காமேஸ்வரன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களைப் பட்டியலிட்டால் அதில் தவிர்க்க முடியாதவர் காமேஸ்வரன் ஆவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்று இங்கிலாந்தின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் பயிற்சி பெற்ற அவருக்கு, தமிழ்நாட்டை உலகின் சிறந்த மருத்துவ  மையங்களில் ஒன்றாக உயர்த்த வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்காக கடுமையாக உழைத்தார்.  அது தொடர்பான தமிழக அரசின் முயற்சிகளுக்கு வழிகாட்டியதுடன், துணையாகவும் இருந்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். பத்மஸ்ரீ, பி.சி.ராய் உள்ளிட்ட விருதுகளையும் வென்றவர். தமிழ் மொழி, இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். மருத்துவத்தைத் தொழிலாக செய்யாமல் சேவையாக செய்தவர். என் மீது அன்பும், பற்றும் கொண்டவர். அவரது புதல்வர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும்  எனக்கு நெருக்கமானவர்கள். அவர் நூற்றாண்டு விழா கொண்டாடுவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவுச் செய்தியை என் போன்றவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மருத்துவர் காமேஸ்வரன் அவர்களை இழந்து வாடும் அவரது மகன் மோகன் காமேஸ்வரன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், சக மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages