மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சென்னையில் ஆர்ப்பாட்டம்! - Agnipuratchi

மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

Share This

மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகளின் வீடுகள் முன் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைப்படி, தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், நாட்டு மக்களின் நலன் கருதி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் சென்னையில் உள்ள அவரது இல்லத்தின் முன் மதுவிலக்குக்கு ஆதரவாகவும், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அறப்போராட்டம் நடத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages