இணையத்தை கலக்கும் அணில் நகைச்சுவை! - Agnipuratchi

இணையத்தை கலக்கும் அணில் நகைச்சுவை!

Share This

இணையத்தை கலக்கும் அணில் நகைச்சுவை!

சென்ற அதிமுக  ஆட்சியின் போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் வைகை அணையில் இருந்து கடும் வெப்பத்தினால் நீர் ஆவியாவதை தடுக்கும் பொருட்டு Thermocol வாங்கி மிதக்கவிட்டததை இன்றும் மக்களால் மறக்க இயலாத நிலையில், தமிழகத்தில் அண்மை காலமாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு புதிய காரணம் ஒன்றை கூறியுள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள். அதாவது மின்வெட்டு பிரச்சனையை சரி செய்து வருகிறோம். கடந்த திசெம்பர் மாதத்துக்கு பின்னர் தேர்தலை மனதில் வைத்து  முந்தைய அரசு பராமரிப்பு பணிகளை செய்யாமலும், மரங்கள், செடிகளை அகற்றாமலும் விட்ட காரணத்தால் பல இடங்களில் மின் கம்பிகள் இருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ந்து உள்ளன. கிளைகள் இந்த கம்பிகளுக்கு இடையே செல்வதால் அவ்வப்போது கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுகிறது. அதேபோல் அணில்கள் இந்த கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின் கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

இதற்கு பாமக நிறுவனர் மரு.இராமதாசு அவர்கள் சென்னையிலும்  இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?
என வினவியுள்ளார்.

ஏற்கனவே, தேர்தல் பரப்புரையின் போது, முதல்வராக மு.க.ஸ்டாலின் 11 மணிக்கு பதவியேற்றுக் கொண்டாரென்றால், 11.05 மணிக்கு மணல் அள்ள செல்லலாம் என அமைச்சர் செந்தில்பாலாஜி  பொதுக் கூட்டத்தில் பேசியதன் விளைவாக பரபரப்பு ஏற்பட்டு "11.05 மணி செய்திகள்" என்ற தனி டுவிட்டர் கணக்கு துவங்கப்பட்டு திமுக ஆட்சியாளர்களை சிலர்  வறுத்தெடுத்து வரும் நிலையில் தற்போது அணில் இதற்கு விளக்கம் அளிப்பது போல பல போன்மிக்கள் (memes) இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages