மதுவிலக்கு போராட்டத்தின் முன்னோடி மகாத்மா காந்தி - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

மதுவிலக்கு போராட்டத்தின் முன்னோடி மகாத்மா காந்தி - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

மதுவிலக்கு போராட்டத்தின்
முன்னோடி மகாத்மா காந்தி - மருத்துவர் இராமதாசு அய்யா

அன்று - மதுவுக்கு எதிராக போராடிய மகாத்மா காந்தி

தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த மகாத்மா காந்தி இந்திய விடுதலைக்காக எந்த அளவுக்கு தீவிரமாக போராடினாரோ, அதே அளவு தீவிரத்துடன் மதுவிலக்குக்காகவும் போராடினார். 1930-ஆம் ஆண்டில் இந்தியாவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா முழுவதும் கள்ளுக்கடை மற்றும் சாராயக்கடைகள் முன்பு மறியல் போராட்டங்களை அறிவித்தார் மகாத்மா காந்தி.

மகாத்மா அறிவித்த போராட்டம் வட மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றைய சென்னை மாகாணத்தில் மொத்தம் 9,000 சாராயக்கடைகள் இருந்தன. ஆனால், காந்தியடிகளின் எதிர்ப்பால் 6,000 கடைகளை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை.

அதுமட்டுமின்றி மாவட்ட ஊராட்சிகளும், ஊராட்சி ஒன்றியக் குழுக்களும் தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்க அனுமதி அளிப்பதில்லை என்று தீர்மானித்தன. கிராமங்களில் மது குடிப்பவர்களை மக்கள் புறக்கணித்தனர். மதுவுக்கு எதிராக மகாத்மா காந்தி நடத்திய அந்தப் போராட்டம் தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

இந்தியாவில் மதுவை விற்பனை செய்து நம்மைச் சுற்றி குடிகாரர்களாக வலம் வருவதை விட இந்தியா ஏழை, கடன்கார நாடாகவே இருப்பதை நாம் விரும்புகிறேன். நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் வருமானம் குறைந்து கல்வி வழங்குவதற்கு கூட வாய்ப்பு இல்லாத நாடாக இந்தியா மாறுமானால்  அதை நான் வரவேற்பேன் என்றவர் மகாத்மா. மதுவிலக்குக்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தவர்  மகாத்மா.

இன்று - மகாத்மாவை காண்பதற்காக மது விற்கும் தமிழக அரசு

ஆனால், தமிழ்நாட்டை ஆளும் கட்சிகள் எந்த சிரமும் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழியாக மது விற்பனையைப் பார்க்கின்றன. அன்று மதுவை வெறுத்தார் மகாத்மா. இன்று மகாத்மாவின் கொள்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மதிக்கவில்லை.  ஆனால், மகாத்மாவை நேசிக்கிறார்கள். மகாத்மாவின் உருவம் அச்சிடப்பட்ட நோட்டுகளை சேர்ப்பதற்காக அவர் வெறுத்த மதுவை விற்கின்றன மாறி மாறி வரும் தமிழக அரசுகள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages