அக்னிப்புரட்சி இன்றைய (04.07.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 100.44 ரூபாய்க்கும், டீசல் விலை 19காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
💥 உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் (90) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
💥 ரபேல் விமான பேர ஊழல் -நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது பிரான்ஸ்.
ரபேல் ஒப்பந்த முறைகேடு பற்றி விசாரிக்க தனி நீதிபதியை நியமித்தது பிரான்ஸ் அரசு.
💥 மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல - அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்.
இந்திய நாடு பிரிக்க முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம்.
ஒன்றிய அரசு என கூறுவது நியாயம் இல்லை.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் - ஓபிஎஸ்.
💥 தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
"கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"
"சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்"
"ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு"
💥 புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மகிழ்ச்சி ஆனால்,தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டது என்று நாம் நினைக்க வேண்டாம் இரண்டாவது அலை இன்னும் உள்ளது.
மூன்றாவது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை அலட்சியம் இல்லை-ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
💥மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
💥தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ட்ரோன் மூலம் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை
உச்சமான எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு அறிவுறுத்தல்.
💥 உத்தரகாண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக்கொண்டார் - 45 வயதான இவர் மாநிலத்தின் மிக இளம் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
💥 ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் ட்ரோன்கள் பயன்படுத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
ட்ரோன்கள் வைத்துள்ளவர்கள் அவற்றை காவல் நிலையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
💥 மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என எடியூரப்பா நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
💥 அதிமுக ஐ.டி. பிரிவினர் மீது பொய் வழக்கு போடுவதா?
அதிமுகவுக்கு எதிரான அடக்குமுறையை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, பொய் வழக்கு தொடுப்பதில் திமுக நாட்டம் செலுத்துகிறது - எடப்பாடி பழனிசாமி.
💥 தமிழ்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா தொற்று:
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,96,287 ஆக உயர்வு.
கடந்த 24 மணி நேரத்தில் 72 பேர் உயிரிழப்பு; மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33,005 ஆக உயர்வு.
இன்று மேலும் 4,382 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; இதையடுத்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 24,27,988-ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 35,294 போ் உள்ளனர்- மக்கள் நல்வாழ்வுத்துறை.
💥 திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை (05.07.2021) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகளில் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி போடப்படும் விவரங்கள்.👆🏼👆🏼
💥 நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் நாளை திறக்கப்படாது.
எனவே, சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
💥 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை ஆவணதாரர்கள் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமே செலுத்த வேண்டும்.
இடைத்தரகர்கள் மூலமாக ஆவணத்திற்கான கட்டணங்களை செலுத்தக் கூடாது - பத்திரப்பதிவுத்துறை.
No comments:
Post a Comment