தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது: மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்றைய டுவிட்டர் பதிவு
1. வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதும், வலைகளை அறுத்து சேதப்படுத்தி விரட்டியடித்திருப்பதும் கண்டிக்கத்தக்கவை. தாக்குதலால் மீனவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது!
https://twitter.com/draramadoss/status/1411680071660695562
2. தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. இந்திய இறையாண்மையை சிதைக்கும் வகையிலான சிங்கள அரசின் இத்தகைய அத்துமீ்றலை இந்தியா இனியும் அனுமதிக்கக்கூடாது!
https://twitter.com/draramadoss/status/1411680074739240965
3. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்; இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்!
https://twitter.com/draramadoss/status/1411680077822119936
No comments:
Post a Comment