அக்னிப்புரட்சி இன்றைய (12.07.2021) முக்கிய செய்திகள்.
💥 யூரோ கோப்பையை 2வது முறையாக வென்று இத்தாலி அபாரம்.
யூரோ கால்பந்து இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்.
💥 சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 101.92 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
💥 தமிழகத்தில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தது.
நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதி.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இன்று முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதி.
* புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள் , நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி.
* Euro2020 கோப்பையை வென்றது இத்தாலி அணி!
* சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் gccvaccine.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
* பழனி கோவிலுக்கு வந்த கேரள பெண்ணின் கணவரை அடித்து விரட்டி, அப்பெண்ணை, 3 பேர் குழு பாலியல் வன்புணர்வு செய்துள்ளது. பழனி காவல்நிலையம் புகார் வாங்க மறுக்கவே, கேரள DGP அனில்காந்த், தமிழக DGP சைலேந்திர பாபுவுக்கு நடவடிக்கை எடுக்ககோரி எழுதியுள்ளார்
💥 ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை
: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு
* டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளின் பலன் என்ன?
விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது - நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்.
* வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு.
தேர்தல் ஆணையம், கே.சி.வீரமணி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம்: அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானம் நிறைவேற்றம்.
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கும்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்கள்:
மாநிலங்களின் முன் அனுமதியை பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது. கர்நாடக அரசின் மேகதாது அணைக் கட்டும் திட்டத்திற்கு தொடர்புடைய மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என மத்திய அரசை கேட்டுக்கொள்வது.
மேகதாது அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.
தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதல்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
💥கொங்குநாடு என்ற சிந்தனை விஷமத்தனமானது: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கண்டனம்
💥 நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்-மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு.
தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தகவல்.
நீட் நுழைவுத்தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- தேசிய தேர்வு முகமை.
💥 அணையை கட்டுவதில் 100 % உறுதியாக உள்ளோம்
அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை
- கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை
💥NEET தேர்வு செப்டெம்பர் 12ம் தேதி நடைபெறும் என நடுவண் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்.
நாளை மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு
💥NEET தேர்வுக்கு தமிழக மாணவர்கள் ஆயத்தமாக வேண்டும் என மாணவர்களை ஊடகங்கள் வாயிலாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
💥 கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், உடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ள நீண்டதொரு வாள்!
கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என கோவை வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றம்
💥 விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது:
ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் - அதிமுக.
ஊடக நிறுவனங்கள் அ.தி.மு.கவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் ஊடக அறத்திற்கு புறம்பாகவும் விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது வேதனை அளிப்பதால்" அ.தி.மு.கவின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு.
💥 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,652 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,21,438 ஆக உயர்வு.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36 பேர் இன்று உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,454 ஆக அதிகரிப்பு.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3,104 பேர் இன்று டிஸ்சார்ஜ்; இதுவரை 24,56,165 பேர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 31,819 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
💥 கொரோனா 3வது அலை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என மருத்துவ நிபுணர்கள் கூறிவரும் நிலையில், மத்திய அரசு நீட் தேர்வை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
நீட் அறிவிப்பை திரும்பப் பெறுக; இந்த ஆண்டு தேர்வை ரத்து செய்க: திருமாவளவன் வலியுறுத்தல்
💥 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகம் மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளிக்காது. நாளையே மேகதாது அணைக்கு பூமிபூஜை போட வேண்டும்.
கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் கர்நாடக அரசுக்கு கோரிக்கை
No comments:
Post a Comment