அக்னிப்புரட்சி இன்றைய (13.07.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.92 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24 க்கும் விற்பனை.
* கடந்த கால அனுபவங்கள் சர்வதேச நிலவரங்களின்படி கொரோனா மூன்றாவது அலை என்பது தவிர்க்க முடியாதது.
எந்த நேரத்திலும் மூன்றாவது அலை இந்தியாவை தாக்க கூடும்- இந்திய மருத்துவ சங்கம்.
சுற்றுலா யாத்திரை எல்லாம் மக்களுக்கு அவசியமானதுதான்
ஆனால் இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும் - இந்திய மருத்துவ சங்கம்.
* கொரோனா மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு கேலோ இந்தியா போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு
பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் பொன்முடி.
பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார்- அமைச்சர் பொன்முடி.
* டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சென்னை மாநகராட்சி தீவிரம்:
தண்ணீர் தேங்கி இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் என அதிகாரிகள் எச்சரிக்கை.
வீடுகளுக்கு ரூ.200 வரையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.15,000 வரையும், கடைகளுக்கு ரூ.5,000 வரை அபராதம்.
உணவகங்களுக்கு ரூ.25,000 வரையும், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ரூ.10,00,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.
* மேகதாது விவகாரத்தில் காவிரி ஆறு ஓடும் அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் கேட்க
வேண்டியுள்ளது - மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கருத்து.
* நீட் ஆய்வுக்குழு: நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல.
நீட் தேர்வு ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது அல்ல-சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.
நீட் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே, பாதிப்புகளை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தெரிவிக்க முடியும்.
மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது, இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்கும்- சஞ்சீப் பானர்ஜி, தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம்.
*:பதவி காலம் முடிந்தவுடன் அரசுக்கு சொந்தமான இடத்தை காலி செய்ய வேண்டும்- உயர்நீதி மன்றம் உத்தரவு.
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பதவி காலம் முடிந்தவுடன் அரசுக்கு சொந்தமான இடத்தை காலி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனடியாக காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டிஎன்பிஎஸ்சி) 4 உறுப்பினர்கள் நியமனம்.
எஸ்.முனியநாதன் ஐஏஸ், கே ஜோதி சிவஞானம், கே அருள்மதி, ஏ.ராஜன் மரியசூசை ஆகியோர் நியமனம்.
4 உறுப்பினர்களும் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்பு.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,505 பேருக்கு கொரோனா உறுதி; 3,058 பேர் குணமடைந்த நிலையில் 48 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
* மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் வசதிக்காக முதல்முறையாக குவைத்தில் ஒரு நீட் தேர்வு மையம்: முதல்முறையாக 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படவுள்ளது -மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
* ஒருநாள் கிரிக்கெட்டில் 150* ரன்கள் விளாசிய முதல் பாகிஸ்தான் கேப்டன் எனும் சாதனையை படைத்தார் பாபர் அசாம்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக 158 (139) ரன்கள் குவித்தார்.
No comments:
Post a Comment