அக்னிப்புரட்சி இன்றைய (14.07.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.92 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24 க்கும் விற்பனை.
* கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4405 கோடி அபராதம்:
பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு ரூ.4,405 கோடி அபராதம் விதித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் சர்ச்சை உருவானது.
கூகுள் நிறுவனம் இந்த உத்தரவை மதிக்கவில்லை.
இதையடுத்து, கூகுள் நிறுவனத்துக்கு போட்டிகளுக்கான பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு ரூ.4405 கோடி அபராதம் விதித்தது.
மேலும், செய்தி வெளியீட்டாளர்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்படும் என்று 2 மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால், நாள் ஒன்றுக்கு ரூ.7.93 கோடி வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இது குறித்து கூகுள் பிரான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
சில செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது.
இந்த சூழலில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல்:
காயம் காரணமாக, ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.
* நீட் பாதிப்பு தொடர்பான ஆய்வறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு.
165 பக்கங்களை கொண்ட நீட் ஆய்வறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோர்களின் கருத்து - ஏ.கே.ராஜன்.
* கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி:
திருவள்ளூர்: புதுகும்மிடிப்பூண்டி அருகே அங்காள பரமேஸ்வரி கோயில் குளத்தில் மூழ்கி சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.
* அனுமதி இன்றி துப்பாக்கி வைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து அந்தந்த காவல்நிலையத்தில் ஒப்படைக்க ஒரு வாரம் அவகாசம்.
இல்லையென்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ்.
* மத்திய அரசு ஊழியர்களுக்கு 11 % அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% ல் இருந்து 28% ஆக உயர்வு.
ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் சிங் அறிவிப்பு.
* மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆலோசனை.
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.
* மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்து கட்சி குழு நாளை டெல்லி செல்கிறது.
அனைத்து கட்சி குழு டெல்லியில் நாளை பிரதமரை சந்திக்க உள்ளது.
ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தில்,
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக, அதிமுக, பாமக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பிரதமரை நாளை சந்திக்க உள்ளனர்.
* கும்மிடிப்பூண்டியில் குளத்தில் மூழ்கி இறந்த ஐவரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.
உயிரிழந்த நர்மதா, சுமதி, ஜோதி, அஸ்விதா, ஜீவிதாவின் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல்.
* புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து மதுபானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 20% கூடுதல் விலை உயர்த்துப்பட்டுள்ளதாக கலால் துறை துணை ஆணையர் சுதாகர் அறிவித்து, அரசிதழில் வெளியீடு.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்:55 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,021 பேர் குணமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment