அக்னிப்புரட்சி இன்றைய (15.07.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (15.07.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (15.07.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 102.23 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்ததினம் இன்று.

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டதை தொடங்கிய முதல்வர் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்த கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

* கொள்கை பிடிப்பு மிக்கவரின் நூற்றாண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவின் 100வது பிறந்தநாள் இன்று.

அவரது இல்லத்திற்கு அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் நேரில் சென்று வாழ்த்து.

* தேச துரோக சட்டம் 124-ஏ பிரிவு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது - மனு.

ஆங்கிலேயர் கால தேச துரோக சட்டம் தற்போதும் தேவைப்படுகிறதா?

தேச துரோக சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.

* புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு.

பள்ளி, கல்லூரிகள் திறக்கும் சூழல் வரும்போது மீண்டும் திறக்கப்படும் - அமைச்சர் நமச்சிவாயம்.

* உரிய அனுமதி பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று கொள்ளலாம் என்ற அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை.

ஜூலை 7ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

நீர்நிலைகளை துல்லியமாக அளவீடு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

நீர்நிலைகளை ட்ரோன் மூலமும், ஜிபிஎஸ் மூலமும் படங்கள் எடுப்பதுடன், நேரடியாக துல்லியமாக அளவீடு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* ரூ 2000 நோட்டு செல்லாது என விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக்கூறி சென்னை தொழிலதிபரிடம் ₹45 லட்சம் பறிப்பு - திட்டமிட்டு போலீஸ் உடையில் திருட்டில் ஈடுபட்ட 9 பேர் கைது.

* புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு.
சுற்றுலா தலங்களில் 50% நபர்களுக்கு அனுமதி.

* பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா.

மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் வழங்கி, அடிக்கல் நாட்ட வருமாறு கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்.

* ஜேஇஇ மெயின் நான்காம் கட்ட தேர்விற்கான தேதி மாற்றம்:

ஜேஇஇ மெயின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25 வரையும், நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மூன்றாம் கட்ட தேர்விற்கும், நான்காம் கட்ட தேர்விற்கும் இடையே குறைந்தது 4 வாரங்கள் இடைவெளி தேவை என தேசிய தேர்வுகள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால், ஜேஇஇ நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 தேதிகளுக்கு மாற்றப்படுகிறது.

ஜேஇஇ நான்காம் கட்ட தேர்விற்கு இதுவரை 7.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக ஜூலை 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்: மத்திய அரசு.

தமிழகத்தில், கூடுதலாக செங்கல்பட்டு, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார்.

இதன் மூலம் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,405 பேருக்கு கொரோனா; 49 பேர் உயிரிழப்பு; 3,006 பேர் டிஸ்சார்ஜ்- சுகாதாரத்துறை.

* உலகம் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம் தெரிவித்துள்ளார். 

அதிகப்படியான தளர்வுகளால் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருக்கின்றனர்.

இக்காரணங்களால் கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் உலகளவில் மீண்டுமொரு முறை அதிகரிக்கிறது. 

அனைத்து நாடுகளும் செப்டம்பர் இறுதிக்குள் தங்கள் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10% பேருக்காவது செப்டம்பர் இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

2021 முடிவதற்குள் குறைந்தபட்சம் 40% பேருக்கும், 2022 ம் ஆண்டு பாதிக்குள் 70% பேருக்கும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே கொரோனாவின் தாக்கத்தை ஓரளவாவது சமாளிக்க இயலும்- உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages