அக்னிப்புரட்சி இன்றைய (23.07.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.
* அவை முடக்கப்படுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை - எதிர்கட்சிகளின் தொடர் அமளி குறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அதிருப்தி.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுவரை கொரோனா தொடர்பான விவாதம் மட்டுமே ஆக்கப்பூர்வமாக நடைபெற்றுள்ளது.
அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு உறுப்பினர்களிடம் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
* துணை தேர்வு எழுத விரும்பும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
12-ஆம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கு ஆகஸ்ட் 6 முதல் 19-ம் தேதி வரை துணை தேர்வு நடைபெற உள்ளது.
* அதிமுக முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ₹25 லட்சம் பணம் ஆவணங்கள் பறிமுதல்.
* சரிபார்ப்புக்காக எந்த ஒரு எண்ணையும் அழைக்க/KYC அப்டேட் செய்ய/ஆதார் விவரங்களை புதுப்பிக்க சொல்லும் எந்த பயன்பாட்டையும் பதிவிறக்குமாறு கேட்கும் மோசடி செய்திகளை நம்பவேண்டாம். இதுபோன்ற செயல்களுக்கு எந்த மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்ய ஜியோ ஒருபோதும் கேட்பதில்லை. இதுபோன்ற SMS/அழைப்புகளிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள், இதனால் நிதி இழப்பு ஏற்படக்கூடும். பாதுகாப்பாக இருங்கள்.
- அணி ஜியோ
* தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்த இஸ்ரேல் தயாரித்தது பெகாசஸ் உளவு சாப்ட்வேர் - ராகுல் காந்தி.
இந்தியாவில், பெகாசஸ் உளவு சாப்ட்வேர் ஜனநாயகத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது- ராகுல் காந்தி.
உளவு சாப்ட்வேரை பயன்படுத்த அதிகாரம் பெற்றவர்கள் யார்? மத்திய அரசு விளக்கம் அளிக்க ராகுல் காந்தி கோரிக்கை.
* நாடு முழுவதும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகள் குறித்து டெல்லியில் உள்ள வடக்கு மண்டல அமர்வு மட்டுமே தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டிருந்தது. இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவ நலச் சங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
* ஜூலை 28ம் தேதி தமிழகம் முழுக்க அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக அதிமுக ஆர்ப்பாட்டம்.
தமிழக நலன் சார்ந்த விவகாரங்களில் திமுக மெத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டம்.
* திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்குபுதிய துணைவேந்தர் நியமனம்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள முத்துகலிங்கன் கிருஷ்ணன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம்.
* திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் - மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்.
கொரோனா காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி விளக்கம்.
* சொந்த தேவைக்காக அரசு பேருந்தில் காவல் துறையினர் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும்- காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.
* மகாராஷ்டிரா நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி.
ராய்காட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாவட்டத்தை உள்ளடக்கிய கொங்கன் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஹெலிக்காப்டர் பயன் படுத்தப்பட்டுள்ளது.
* ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடக்கம்.
ஜப்பான் அரசர் நருஹிட்டோ, பிரதமர் யோஷிஹிடே, ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்பு.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32 வது ஒலிம்பிக் போட்டியில் 204 நாடுகளை சேர்ந்த 11,000- க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் 13 பேர் பங்கேற்பு. இந்த திருவிழா ஜப்பானின் டோக்கியோவில் இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது.
* தமிழகம் கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலேயே முழுமையான அணுகுமுறையை பயன்படுத்தி கருத்தரிப்பு விகிதத்தை குறைத்துள்ளன. - மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்...
* ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு.
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நாளையுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில் மேலும் 6 மாத காலம் அவகாசம் நீட்டிப்பு.
* தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 24 பேர் உயிரிழப்பு மற்றும் 2,516 பேர் டிஸ்சார்ஜ்.
கடந்த 24 மணி நேரத்தில் 1.35 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; தற்போது 24,816 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
No comments:
Post a Comment