அக்னிப்புரட்சி இன்றைய (24.07.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.07.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.07.2021) முக்கிய செய்திகள்.

*:சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 7 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.

* டோக்கியோ ஒலிம்பிக்கின்  வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா குமாரி, பிரவீன் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.

* பெண்களுக்கான 10 மீ துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டின் இளவேனில் மற்றும் அபூர்வா ஆகியோர் பதக்க சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

* டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி.

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி: இந்தியா - நியூசிலாந்து அணியின் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி.

* டோக்கியோ ஒலிம்பிக்: சீனாவுக்கு முதல் தங்கம்.

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் -  பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சீன வீராங்கனை யாங் கியான் தங்கம் வென்றார்.

*:பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது:

இந்து மத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் கைது.

* சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்காலுக்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்க உள்ளது.

விரைவில் நிறுவனங்களை உறுதி செய்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தகவல்.

* சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு.

குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மதிப்பெண்கள் பிரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் வெளியீடு.

*;டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி பதக்க சுற்றுக்கு தகுதி பெற்றார்.

* இன்று முதல் தமிழகம் முழுவதும் நூலகங்களை திறக்க உத்தரவு.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்களை தவிர்த்து பிற நூலகங்களை திறக்கலாம்- பொது நூலகத்துறை இயக்குனர் நாகராஜ முருகன் அறிவிப்பு.

* ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வெள்ளி.

பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீரா பாய்சானு வெள்ளி பதக்கம் வென்றார். 49 கிலோ பளு தூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீரா பாய்சானு வெள்ளி பதக்கம் வென்றார்.

* டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் - பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாய் சாணுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து.

* மீண்டும் ஒரு பதக்கம்?
ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் செளத்ரி விளையாடி வருகிறார்; பதக்கம் வெல்லவும் அதிக வாய்ப்பு.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் 10 மீட்டர் பிரிவு துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 7வது இடத்தை பிடித்தார்.

* சார்பட்டா பரம்பரை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.

‘சார்பட்டா' படத்தில் எம்.ஜி.ஆர்-க்கும், விளையாட்டு துறைக்கும் தொடர்பில்லாத‌து போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன - ஜெயக்குமார்.

* மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகள் உட்பட புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

நீர்வளத்துறை ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படம் திறப்பு.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

* மோசடி எச்சரிக்கை!
ஆர்பிஎல் பேங்க் அட்டை செயலாக்கத்துக்கு, வெகுமதியை மீட்பதற்கு, கடன் வரம்பை அதிகரிப்பதற்கு, பரிசுச் சான்றுச்சீட்டுகள் வழங்குவதற்கு என ஒருபோதும் அழைக்கவோ & உங்கள் அட்டை விபரங்களை / OTP-ஐ கேட்பதில்லை.

* தமிழகத்தில் இன்று 1819 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு.

27 பேர் உயிரிழந்துள்ளனர், 2,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 24,025 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழ் நாட்டில் மீண்டும் குலுக்கல் சீட்டு? ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டன அறிக்கை

* பணியிடம், தொழிற்சாலைகள்,  தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

பணியாளர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் கண்டிப்பாக இரண்டு டோஸ்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

300 பேருக்கு மேல் உள்ள நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages