அக்னிப்புரட்சி இன்றைய (25.07.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.07.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.07.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.

* நடிகை யாஷிகா ஆனந்த் கார் கவிழ்ந்து விபத்து:

மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் - சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதி.

* பயணிகள் பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும், நடத்துனர்கள் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் சினத்துடனோ, ஏளனமாகவோ இழிவாகவோ பேசக்கூடாது என  மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை

* ஒலிம்பிக் - இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி:

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் பேட்மிண்டன் முதல் சுற்றில் இஸ்ரேலிய வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி.

* நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைப்பு
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே பொதுத்தேர்வு நடத்தப்படும்
: CBSE அறிவிப்பு

* டோக்கியோ ஒலிம்பிக்ஸ் துடுப்பு படகுப் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அரவிந்த் சிங், அர்ஜூன் லால் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்

* கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாப்பான முகக்கவசங்களை வழங்காமல், தரமற்றதை வழங்கியுள்ளனர்.

“பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள்"

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.

கொரோனா நிவாரண தொகையான  4,000 ரூபாயை இதுவரை பெறாதவர்கள் வரும் 31ஆம்  தேதிக்குள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்.

புதிய குடும்ப அட்டைதார‌ர்களும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு.

* வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

* நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசிக்கும் ராதிகா சாஸ்திரி என்ற பெண் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் சிகிச்சை வசதிக்காக AmbuRX என்ற பெயரில் கட்டணமில்லா ஆம்புலன்ஸ் (Free Ambulance) சேவை நடத்தி வருவதற்கு "மன் கீ பாத்" நிகழ்ச்சியில் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி பாராட்டு

* உலக இளையோர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் 73 கிலோ பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின்  பிரியா மாலிக்

இது அங்கேரியில் நடைபெறும் உலக இளையோர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி. (World Cadet Wrestling Championship)

* மயிலாடுதுறை மீனவ பகுதிகளில் பதற்றம்!

சுருக்கு மடிவலை காரணமாக மீனவ கிராமங்களில் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங்கின் ஆணையின்படி  சீர்காழி உட்கோட்ட காவல் சரகம் பூம்புகார், திருமுல்லைவாசல் மற்றும் சந்திரப்பாடி ஆகிய கசிற்றூர்களில் ADSP, DSP, ஆய்வாளர்  உட்பட பலர் கலந்துகொண்டு காவல் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

* வாழ்நாள் முழுவதும் விலையில்லாமல் பீட்சா!

பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு ஒரு பீட்சா பிரியர். வெற்றிக்கு பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கையில் நீண்ட காலமாக கட்டுப்பாடு காரணமாக பீட்சா சாப்பிடாமல் இருந்த நிலையில் முதல் வேலையாக பீட்சா சாப்பிட வேண்டும் என கூறியிருந்தார். இதை கண்ட பீட்சா விற்பனைக்கு பெயர் பெற்ற டோமினோசு உணவக நிறுவனம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் தங்களுடைய உணவகங்கள் பீட்சாவுக்கு கட்டணம் ஏற்கப்படாது என்ற வெகுமதியை அறிவித்துள்ளது

*:அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமியும் டெல்லி பயணம்.
இன்றிரவு டெல்லி புறப்படும் ஈ.பி.எஸ்., நாளை காலை பிரதமரை சந்திக்கிறார்.

* கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மாநிலம் முழுவதும் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

tngasa.org மற்றும் tngasa.in என்ற இணையதளங்களில் நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அறிவிப்பு.

* பொறியியல் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பம்:

B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. tneaonline.org இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை  விண்ணப்பிக்கலாம்.

செப்.4ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

ஆக.25ல் ரேண்டம் எண் வெளியாகும்.
செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும்.

அக்.20க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

* நிலச்சரிவால் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; வைரல் வீடியோ…..

ஹிமாச்சல் மாநிலம், கின்னார் மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக அங்குள்ள பாலம் இன்று இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சில வாகனங்களும் சேதடைந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நிலச்சரிவின் போது பெரிய பாறைகள் உருண்டு வந்து பாலத்தின் மீது விழும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

* தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,808 பேர் பாதிப்பு; 22 பேர் பலி; 2,447 பேர் குணம்-சுகாதாரத்துறை.

* தமிழகத்தில் மீண்டும் குலுக்கல் சீட்டு கொண்டுவரப்படாது. - நிதியமைச்சர் பழனிவேல்  தியாகராஜன்

* ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் அண்ணன், தங்கை இருவரும் தனித்தனியாக தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்

ஜப்பானின் ஏபிஇ ஹிஃபூமி மற்றும் உட்டா எனும் சகோதர சகோதரிகள் இருவரும் ஜூடோ போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

* தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர tngasa.org & tngasa.in இணையதளங்களில் நாளை முதல் ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்

:கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் அறிவிப்பு.

* அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் இன்று இரவு தில்லி புறப்படுகின்றனர். நாளை அனைவரும் மோடி அவர்களை  சந்திக்கின்றனர்.

நாளை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்
ஓ . பன்னீர்செல்வம்

பிரதமர் நரேந்திர மோதியின் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பின்பேரில் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு ஆளுநர் பதவி, மகனுக்கு அமைச்சர் பதவி என பல ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages