பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு அரசியல் கட்சிகள் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து!
பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் 83-ஆவது பிறந்தநாள்: பிரதமர், மத்திய உள்துறை
அமைச்சர், முதல்வர் தொலைபேசியில் வாழ்த்து!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் 83-ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று காலை அவரை மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மருத்துவர் அய்யா அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், தில்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.
மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் இன்று காலை மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 83-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட மருத்துவர் அய்யா அவர்கள்,‘‘ உங்கள் தந்தை கலைஞர் என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். மருத்துவர் அய்யாவை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும் என்று வாழ்த்தினார். அதற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் 83- ஆவது பிறந்தநாளையொட்டி, அவரை மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அவர்கள் இன்று பிற்பகலில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் 83- ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று அவரை மாண்புமிகு தெலுங்கானா மாநில ஆளுனர் ( புதுவை துணை நிலை ஆளுனர் கூடுதல் பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மருத்துவர் அய்யா அவர்கள் எல்லா நலமும்,வளமும் பெற்று தொடர்ந்து மக்களுக்கான அரசியல் தொண்டாற்றிடவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குறிப்பிட்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘’காட்சிக்கு எளியவர் - மனத்தால் எளியோரின் மருத்துவர் கடிகாரம் - அதற்கு நேரம் சொல்லும் நியமம் கொண்டவர் இளைஞருக்கு வழிகாட்டும் பண்பாளர் பாமக நிறுவனர் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்தவர் நம் மருத்துவர் அய்யாவை @drramadoss அவர் பிறந்த நாளில் வணங்குகிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் அவர்களும் மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதிமுகவின் சட்டப்பேரவைக் கொறடாவும், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் டுவிட்டர் பதிவுகள் மூலம் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் அவர்களும் மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment