அக்னிப்புரட்சி இன்றைய (01.08.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.08.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.08.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.

* கோவையில், கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் 8ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி - மாவட்ட ஆட்சியர் சமீரன் நடவடிக்கை.

* இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை - முதலமைச்சர் அறிவுறுத்தல்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு இந்தாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

மக்களுக்கு பயன்தரும் வகையில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் விவசாயத்துக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும்.

💥 கோவையில் ஊரடங்கு கட்டுபாடுகளை தீவிரமாக்கி மாவட்ட ஆட்சியர் ஆணை.

அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* அறநிலையத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் செயல் அலுவலர் அஜித் இடைநீக்கம் செய்து ஆணையர் குமரகுருபரன் ஆணையிட்டுள்ளார்.

* புதுச்சேரியில் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி

* ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெளிவான அறிக்கை வெளியீடு.

* நாளை குடியரசு தலைவர் வருகையை ஒட்டி போக்குவரத்து காவல்துறையினர் நாளை எங்கு பணியில் இருக்க வேண்டும் என்பதற்கான அணிவகுப்பு ஒத்திகை

* உறுப்பினர்கள் கவனத்திற்கு!
B.Sc Nursing, Diploma in General Nursing & Midwifery, Certificate course in Auxiliary Nursing - Midwifery ஆகிய 3 படிப்புகள் தான் அனுமதிதரப்பட்ட செவிலியர் படிப்புகள்.

இது தவிர வேறு பெயர்களில் வழங்கப்படும் போலி படிப்புகளில் சேர்ந்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள்.

* ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வருபவர்களுக்கு RT-PCR சோதனை அவசியம்

2 தவணை தடுப்பூசி செலுத்தி 14 நாட்கள் நிறைவடைந்தவர்கள் உள்ளே வர அனுமதி - தமிழக அரசு

* பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் கொரோனா 3ஆவது அலை வரும். புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு வந்த காரணம் குறித்து ஆய்வு.

* தவிர்க்க முடியாத காரணத்தினால் 9 இடங்களில் வணிக பகுதிகள் மூடல்- சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி.

* அசாம்: யானை கூட்டத்தை ஹாரன் அடித்து தொந்தரவு செய்த மக்கள் - ஒருவரை யானை மிதித்து கொன்றது.

* நாடு முழுவதும் ஜூலை மாதத்தில் மட்டும் 13 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கும் - சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா.

* ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் சிந்து:

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றார்.

வெண்கல பதக்கத்துக்கான பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெற்றி.

சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை வீழ்த்தினார் சிந்து.

இரண்டு Olympics பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புகழையும்  பெற்றார்.

* டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய ஆடவர் அணி.

காலிறுதியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல்.

41 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய ஆடவர் அணி.

* தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது!

மேகேதாட்டு அணை கட்டுவது உறுதி என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையின் கருத்துக்கு தமிழக பாஜக பேச்சாளர் நாராயணன் திருப்பதி பதில்.

* கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க பென்னிகுவிக் வாழ்ந்த வீடு இடிப்பு?!பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா கண்டனம்

மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பதற்காக, மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் வாழ்ந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வீட்டை இடிக்கும் திட்டத்தை  தமிழக அரசு கைவிட வேண்டும்.

கலைஞர் பெயரில் அறிவை வளர்க்கும் கருவியான நூலகத்தை அமைப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிப்பது முறையல்ல. பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் வசிப்பிடமாக உள்ள அந்த இல்லத்தை பென்னிகுவிக் நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்!

மதுரை பாண்டி கோயில் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அதிகமாக உள்ளன. அங்கு இப்போது திட்டமிடப்பட்டதை விட இன்னும் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கலாம். அதற்காக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

* திருச்சிராப்பள்ளி  உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 20 IIM-களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு நவம்பர் 28-ம் தேதி நடைபெறும்.

தேர்வுக்கு வரும் ஆகஸ்ட்  4-ம் தேதி முதல் செப்டெம்பர் 15-ம் தேதி வரை iimcat.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

* மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை வீடியோ.

கொரோனா தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வதைத்து வருகிறது.

அரசின் நடவடிக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்களின் சேவையால் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியுள்ளோம்.

ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகிறது.

முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் எச்சரிக்கை இன்றி இருப்பது வேதனையளிக்கிறது.

அதனால் அதிக கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட கூடாது என்றே கடைகளை திறக்க உத்தவிட்டுள்ளோம், ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது.

மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்திட வேண்டாம் என்று கடுமையாகவே சொல்கிறேன்.

மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வல்லமையும், உட்கட்டமைப்பும் தமிழக அரசுக்கு உண்டு, அதனால் கொரோனாவை விலை கொடுத்து வாங்க வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள்.

மூன்றாவது அலை கடுமையாக இருக்கும் என வல்லுனர்கள் சொல்வதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு நாம் மிக அவசியமான தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினியை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து நம்மையும், நாட்டையும் காப்போம் என தெரிவித்திருக்கிறார்.

* சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது அதிமுக

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages