அக்னிப்புரட்சி இன்றைய (05.08.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
💥 வெண்கலப் பதக்கத்தை வென்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.
ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
* சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து சேலம் ஆட்சியர் கார்மேகம் உத்தரவு.
வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காடு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை - சேலம் ஆட்சியர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று திட்டத்தை முதலமைச்சர் பார்வையிட்டு வருகிறார்.
இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்.
மருத்துவமனைகளை மக்கள் தேடி வரும் சூழலை மாற்றும் வகையில் நடவடிக்கை.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்-முதலமைச்சர் ஸ்டாலின்.
* பெகசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்காதது ஏன்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி.
பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது-நீதிபதி.
2019ஆம் ஆண்டிலேயே இந்த விவகராம் வெளிவந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அவசரமாக இதனையை கையாளவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது - தலைமை நீதிபதி கேள்வி.
பெகசஸ் விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை - உச்சநீதிமன்றம்.
* SBI வங்கி தனது முதல் காலாண்டில் ₹6,504 கோடி நிகர லாபம் பெற்று சாதனை படைத்துள்ளது. இது சென்ற ஆண்டை காட்டிலும் 55% அதிகமாகும்
* 2021-22 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் வரும் 13ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், முதன்முறையாக "இ-பட்ஜெட்" அறிமுகம் செய்யப்பட உள்ளது.
* செப்டெம்பர் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நீடிப்பு - தேசிய தேர்வு முகமை.
* மீண்டும் மேலவை!
தமிழகத்தில் மீண்டும் உருவாகிறது சட்டமன்ற மேலவை. நடப்பு பொக்கீடு கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற நடைபெற்ற அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
* போலி ஆவண பதிவை தடுக்கும் நோக்கில் ஆவண எழுத்தர்களின் பெயர், புகைப்படம், உரிமம் எண் ஆகியவற்றை ஆவணத்தின் இறுதிப் பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என்று பதிவு துறை பொது ஆய்வாளர் சிவன் அருள் ஆணையிட்டுள்ளார். இந்த நடைமுறை ஆகத்து 9ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
* மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்.
💥 2013ல் சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.
* குடும்பத் தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் திட்டத்தை ஆகஸ்ட் 15 அன்று துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது.
விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கல்வித்துறை உத்தரவு.
அரசுப்பள்ளி, தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் சிறப்பாசிரியர்களும் விருதுக்கு தகுதி உடையவர்கள்.
5 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக எவ்வித புகாருக்கும் இடம்தராமல் கல்விப்பணி ஆற்றிவருவோருக்கு விருது.
* தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பயணம். அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி - தமிழக அரசு.
💥தமிழகம் ஒப்புதல் இன்றி காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது: நடுவண் அரசு!
தமிழகம் உள்ளிட்ட கடைமடை மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணை திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை விதிகளின்படி ஒப்புதல் அளிக்க முடியாது.
கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர் ரேவண்ணா எழுப்பிய கேள்விக்கு நடுவண் சலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் பதில்
💥தமிழ்நாடு பாடநூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியைக் குறிக்கும் சொற்கள் நீக்கம்
https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-textbook-drops-caste-surnames-of-eminent-scholars/article35734281.ece
💥 வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி மீதத்தை செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ரூ.50 க்கு பெட்ரோல் போடும் சாதாரண ஆட்கள் கூட வரி செலுத்துகிறார்கள்.
ஹெலிகாப்டர் கூட வாங்கிக்கொள்ளுங்கள், அதற்கு வரி கட்டாமல் இருப்பதை ஏற்க முடியாது- நீதிபதி சரமாரி கேள்வி.
மக்கள் வரி பணத்தில் போடப்பட்ட சாலையில்தான் காரை ஓட்டப் போகிறீர்கள். வெளிநாட்டு கார் வாங்கினால் வானிலா பறக்க முடியும்?- நீதிபதி.
சோப்பு வாங்கும் தினக்கூலி கூட வரி கட்டுகிறார்கள்; அவர்கள் வழக்கு தொடுக்கிறாரா?
மனுவில் என்ன வேலை செய்கிறார் என்பதை தனுஷ் குறிப்பிட வேண்டும்.
கோடிக் கணக்கில் நீங்கள் சம்பளம் வாங்கினாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்
மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது, அதற்கான வரியை செலுத்த வேண்டியதுதானே..?
தனது வண்டிக்கு Petrol போடும் ஒரு பால்காரர் கூட வரி செலுத்தும்போது நீங்கள் செலுத்தினால் என்ன..?
சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்துவிட்டு, இப்போது வழக்கை திரும்பப் பெறுவதாக சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்..?
தனுஷ் என்ன தொழில் செய்கிறார் என்பதை மறைத்தது ஏன்? - நீதியரசர் MS.சுப்பிரமணியம் சரமாரி கேள்வி.
* பள்ளிகளில் 6 - 18 வயதுடைய இடைநின்ற மாணவர்களை கணக்கெடுப்பு செய்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும்.
தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
சொகுசு காருக்கான நுழைவு வரி பாக்கி ரூ.30.30 லட்சத்தை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும்- நடிகர் தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
💥 அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
💥 மல்யுத்தத்தில் வெள்ளி வென்றார் ரவிகுமார் தாஹியா:
ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த இறுதிப் போட்டி; ரஷ்ய வீரர் வெற்றி பெற்றதால் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியாவிற்கு வெள்ளிப் பதக்கம்.
💥 மதுசூதனன் மறைவையொட்டி வரும் 7ஆம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - அதிமுக தலைமை
அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து - அதிமுக தலைமை.
* இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்" தொடக்கம்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடக்கி வைத்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க உள்ளது
💥 தமிழகத்தில் இன்று 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 1,943 பேர் இன்று டிஸ்சார்ஜ்.
33 பேர் உயிரிழப்பு; தற்போது 20,138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
No comments:
Post a Comment