அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ. மதுசூதனன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று பிற்பகலில் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன், கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆரில் தொடங்கி இப்போதைய தலைவர்களாக ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரின் நம்பிக்கையையும் பெற்றிருந்தவர். அவரது மறைவு அதிமுகவுக்கும், அதன் தொண்டர்களுக்கும் பெரும் இழப்பாகும்.
மதுசூதனன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அதிமுக தலைமை, தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment