அக்னிப்புரட்சி இன்றைய (07.08.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
💥 தமிழ்நாடு உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய தேடல் குழு உருவாக்கம்
பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியர் திலிப் குமார் துரேஹா, இந்திய குடிமைப் பணியில் அலுவலர் (ஓய்வு) டவிதர், சென்னை பல்கலை., முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் ஆகியோரைக் கொண்ட தேடல் குழு உருவாக்கம்.
* கொரோனாவால் வீட்டு வாசலிலேயே கலைஞர் படம் வைத்து அஞ்சலி செலுத்த தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை.
மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.
* ரூ.36,000க்கும் கீழ் சென்ற தங்கம் விலை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்தது.
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம், ரூ.4,440க்கும் ஒரு சவரன், ரூ.35,520க்கும் விற்பனை.
* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பொறுப்புகளுக்கு மறைமுக தேர்வை விலக்கிக் கொண்டு நேரடி தேர்தலை நடத்த வேண்டும் தமிழக முதல்வருக்கு - விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடிதம்.
💥 நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட அதிதி அசோக்!
Golf உலக தர வரிசை பட்டியலில் 200 வது இடத்தில் உள்ள 23 வயதாகும் அதிதி அசோக் Tokyo Olympics போட்டியில் 4 வது இடத்தில் நிறைவு செய்தார்!
* திமுக மகளிரணியின் புதிய லோகோ!
கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு திமுக மகளிரணியினர் வெளியிட்டு வரும் சிறப்பு வீடியோ மற்றும் படங்களில் திமுக மகளிர் அணியின் சிறப்பாக இலட்சினை (Logo) இன்று முதல் இடம்பெற உள்ளது.
* மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவு நாளான இன்று உதயநிதி ஸ்டாலின் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது...
* கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
புகார் வரும் பட்சத்தில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
* தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற கோரி ஆகஸ்ட் 17ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில் சென்னையில் மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்- ஜி.கே.வாசன்
* ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி:
ஜான்சன் & ஜான்சனின் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கியது மத்திய அரசு.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு ஊசி ஒரு தவணை செலுத்தினால் போதும்.
💥 வெண்கலம் வென்றார் பஜ்ரங் பூனியா: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.
65 கிலோ பிரிவு மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, கஸகஸ்தான் வீரரை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
* திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்.
* நாமக்கல் குமாரபாளையத்தில் முதுகு தண்டுவடம் பாதித்த குழந்தை மித்ராவுக்கு ₹16 கோடி மதிப்பிலான ஊசி மருந்து செலுத்தப்பட்டது.
* தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் எஸ்.செந்தாமரை, நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் மகேஸ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அவரை பொது (தேர்தல்) துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
5. பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஏ.ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் எம்.லஷ்மி, சி.எம்.டி.ஏ தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 1,839 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு.
1.65 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; 20,286 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
💥 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயினை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது பிரேசில் அணி.
💥🥇 ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா:
ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை.
ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.
🥇 டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்தார் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் தடகள போட்டிகளில் முதல்முறையாக ஒரு தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார் நீரஜ் சோப்ரா🥇
🥇 விடுதலை இந்தியாவின் கனவு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.!
நூறாண்டுகளில் தடகளத்தில் முதல் பதக்கம். அதுவும் தங்க பதக்கம்.
ஒலிம்பிக் தடகள மைதானத்தில் முதல் முறையாக இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கிறது.
நம்பவே முடியாத ஒன்று நடந்ததுபோல உணர்கிறேன்; எனக்கும், நாட்டுக்கும் பெருமிதமான தருணம் இது - டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேட்டி.
🥇
Neeraj Chopra is not a overnight star,
he achieved a lot already.
2016 - Junior World Championships GOLD🥇
2017 - Asian Championships GOLD🥇
2018 - Commonwealth Games GOLD🥇
2018 - Asian Games GOLD🥇
2021 - OLYMPICS GOLD🥇
அடிப்படை வசதிகள் இல்லாமல் என்னுடைய ஊரை விட்டு நான் வெளியேறியது போல, வேறு யாரும் வெளியேறக் கூடாது
என்னுடைய ஊரில் விளையாட்டு திடல் கூட இல்லை. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா
💥🥇🥈🥉ஒரே ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 விதமான பதக்கங்களையும் இந்தியா வெல்வது இதுவே முதல் முறை🥉🥈🥇
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிப்பு.
ஆக்சிஜன் உற்பத்திக்காக தினசரி 24 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டது.
ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிப்பு.
No comments:
Post a Comment