ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமென்று மருத்துவர் அய்யா அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதோடு கடந்த 10.08.2021 அறிக்கை வாயிலாகவும் சொல்லியிருந்தார்கள். இதை நான் பாமக தலைவர் ஜி.கே.மணி
சட்டமன்றத்தில் 19.08.2021 அன்று வலியுறுத்தி விளக்கமாக பேசினேன். தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது வரவேற்புக்குரியது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் 80,000 பேர் வேலை வாய்ப்பு வழங்கப்படாமல் காத்திருக்கின்றார்கள் இந்நிலையில் மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
80,000 பேர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை அதோடு இவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாழ்நாள் முழுவதும் இந்த தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். வரக்கூடிய காலிப் பணியிடங்களில் தேர்ச்சி இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். காரணம் இவர்களுக்கு வயது வரம்பு கடந்து கொண்டிருக்கிறது எனவே இவர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். காலி பணியிடங்களில் இவர்களுக்கு பணியிடங்கள் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினேன்.
இதை அரசு தரப்பில் ஏற்றுக்கொண்டுவெளியிட்டிருக்கிறது.
இது வரவேற்புக்குரியது. தேர்வு எழுதிய 80,000 பேருக்கும் பயன் கிடைக்கும். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment