அக்னிப்புரட்சி இன்றைய (25.08.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.52 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
💥 செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்களை திறந்து 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சூடான சத்துணவு வழங்க உத்தரவு - அரசாணை வெளியீடு.
அங்கன்வாடி பணியாளர்கள் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் எனவும் உத்தரவு.
* பொறியல் படிப்புக்கான விண்ணப்பம் அளிப்பது நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு கலந்தாய்விற்கான ரேண்டம் எண் வெளியிடப்படவுள்ளது - தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் ரேண்டம் எண்ணை வெளியிடுகிறார்.
💥 இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
ஒரே நாளில் 37,593 பேர் கொரோனாவால் பாதிப்பு.
ஒரே நாளில் 34,169 பேர் கொரோனவிலிருந்து குணமடைந்தனர்.
3,22,327 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் 648 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
💥 2021-22ம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பயிர்க்கடன் வழங்க ₹11,500 கோடி இலக்கு நிர்ணயம்.
ஜூலை 31 வரை 98,036 விவசாயிகளுக்கு ₹763 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது - கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
மக்கள் எளிதில் சென்று வரமுடியாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் நியாய விலைக்கடைகள் திறக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
கடந்த மே மாதம் 7ம் தேதியில் இருந்து தற்போது வரை மட்டும் 3,38,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
* மாநிலத்தில் தனியாக அல்லது குடும்பமாக வசித்து வரும் திருநங்கைகளுக்கு ஜுலை 31 வரை 2950 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
தமிழகம் முழுவதும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் செயல்படாது என்கிற தடை தொடரும்
- வருவாய் பேரிடர் நிர்வாக துறை
* சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அங்கு 11 பேர் கொண்ட IIT வல்லுநர்கள் குழு ஆய்வு
💥 தமிழக பாஜக முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் குறித்த வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் "மதன் டைரி யூடியூப் சேனல்" முடக்கம்.
💥 அமெரிக்காவில் தற்போது பரவி வரும் கொரோனா வகை காரணமாக இதுவரையில் இல்லாத அளவிலான தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் ICU பிரிவில் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
💥 வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடுக்கு தடையில்லை.
இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.
வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.
பிரதான வழக்குகளின் இறுதி விசாரணை செப்டம்பர் 14 ம் தேதிக்கு தள்ளிவைப்பு.
💥 மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது.
திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
💥 கூட்டுறவு சங்கங்களில் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களின் வட்டி 12%-ல் இருந்து 7% ஆக குறைப்பு - சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.
கடன் வரம்பு 12 லட்சமாக உயர்வு - ஐ.பெரியசாமி.
💥 கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை.
மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள்.
ஆசிரியர் தினமான செப்.5க்குள் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
💥 ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதலாக 2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.
💥 ஆப்கன் நாட்டை சேர்ந்தவர்கள் இ-விசா முறையில் மட்டுமே இந்திய பயணம் மேற்கொள்ள வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சகம்.
இந்தியா வர விரும்பும் ஆப்கானியர்கள் indianvisaonline.gov.in என்ற இணையதளம் மூலம் இ-விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு.
* மகளிர் தன்னுதவிக் குழுவில் இருக்கும் பெண்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக்கப்படுவர்
- அமைச்சர் பெரியசாமி
* மதன் இரவிச்சந்திரன் பாஜகவில் இருந்து நீக்கம்
* உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து உடைத்த வழக்கு:
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 9 பேருக்கு பிடிவாரண்ட் பிறபித்து உளுந்தூர்பேட்டை மாஜிஸ்ட்ரேட் உத்தரவு.
💥 இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் செல்லும் -சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வு தீர்ப்பு.
கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த நிர்வாக விளக்கங்கள் வழங்கப்படாததால் விதிகள் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி - நீதிமன்றம்.
சட்டத்தில் உள்ள தேவையற்ற விதிகளை நீக்கி, புதிய விதிகளை வகுக்க வேண்டும் - நீதிமன்றம்.
கோவில்களின் சொத்துக்கள் முறையாக பராமரிக்க வேண்டும்; கோவில்களின் கட்டிடக்கலை மதிப்புக்களை பாதுகாக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.
💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.
கொரோனாவிலிருந்து மேலும் 1,797 பேர் குணமடைந்த நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 18,352 ஆக உள்ளது.
💥 கேரளாவில் இன்று ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 215 பேர் உயிரிழந்துள்ளனர்
No comments:
Post a Comment