அக்னிப்புரட்சி இன்றைய (12.08.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.08.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.08.2021) முக்கிய செய்திகள்.

💥 ஜிஎஸ்எல்வி F-10 ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறு:

சற்று முன் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி F-10 ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் கோளாறு. மூன்றாவது நிலையில் கோளாறு ஏற்பட்டதால் செயற்கை கோளை கொண்டு செல்லும் இலக்கு எட்டப்படவில்லை.

ஜிஎஸ்எல்வி எப்10 குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்.

💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.

* நாமக்கல்லில் முட்டை விலை திடீர் சரிவு:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்து ரூ.4.20 ஆக விலை நிர்ணயம்.

💥 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு:

தீவிரம் இல்லாத, ஆக்சிஜன் இல்லாத படுக்கைக்கான ஒரு நாள் கட்டணம் ரூ.3000-ஆக நிர்ணயம்.

தீவிரம் இல்லாத, ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைக்கான கட்டணம் ரூ.7000-ஆக நிர்ணயம்.

வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 நிர்ணயம்.

* பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித்தோ்வா்கள் மற்றும் மதிப்பெண்களை கூட்ட விரும்பும் மாணவா்களுக்கான துணைத் தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது சிபிஎஸ்இ.

பிளஸ் 2 துணைத்தோ்வு ஆக.25 முதல் செப்.16 வரையிலும், பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு ஆக.25 முதல் செப். 8-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

பிளஸ் 2 வகுப்புக்கு ஹிந்தி (எலக்டிவ்), அரசியல் அறிவியல், புவியியல், பொருளியல், உளவியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உடற்கல்வி, கணக்குப் பதிவியியல், மனை அறிவியல் ஆகியவை உள்ளிட்ட 19 பாடங்களுக்கும், பத்தாம் வகுப்புக்கு ஹிந்தி, அடிப்படை கணிதம், மனை அறிவியல், அறிவியல், கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பம், சமூகவியல் உள்ளிட்ட 10 பாடங்களுக்கும் இந்தத் துணைத்தோ்வு நடைபெறவுள்ளது.

ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்தவா்கள், மதிப்பெண்களால் திருப்தி அடையாமல் மீண்டும் எழுத வேண்டும் என்று நினைக்கும் மாணவா்கள் இந்தத் தோ்வுகளை எழுதலாம்.

கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தோ்வு மையங்கள் அமைக்கப்படும் என சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.

* எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு முடக்கம்:

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு,  வங்கி லாக்கர்களையும் முடக்கியது லஞ்ச ஒழிப்புத்துறை.

* காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது.

விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர்  கணக்கை முடக்கியது ட்விட்டர் நிறுவனம்.

ராகுல் காந்தி, மாணிக்கம்தாகூர், சுர்ஜிவாலா, கே.சி.வேணுகோபால், சுஷ்மிதா தே உள்ளிட்ட தலைவர்களின் ட்விட்டர் பக்கம் ஏற்கனவே முடக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

💥 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடை.

பஞ்சாயத்து தலைவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு.

💥 முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் மருத்துவக் கட்டணம் மாற்றியமைப்பு

💥 அதிமுகவை குறை சொல்வதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. மாநிலத்தின் நிதிநிலைமையை விளக்கவே வெளியிடப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை மாற்றியமைக்கவோ கைவிடவோ காரணத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த வெள்ளை அறிக்கை இல்லை: முரசொலி விளக்கம்

💥 நிதிச்சுமை இருந்தாலும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும்  எண்ணம் தற்போது இல்லை போக்குவரத்து துறை அமைச்சர் இராஜகண்ணப்பன்

* அண்மையில் காங்கிரசு முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரசுக் கட்சியின் அலுவல் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது தெரிவிப்பு

💥நடுவண் உள்துறை அமைச்சகம் வழங்கும் "சிறந்த புலனாய்விற்கான விருது" தமிழக காவல் துறையில் 4 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 8 ஆய்வாளர்கள் பெறுகின்றனர்.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி - தமிழக அரசு.

உயிரிழந்த 34 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க ரூ.8.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு.

* அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள குழு அமைப்பு - ஓபிஎஸ், ஈபிஎஸ்.

ஜெயக்குமார், தளவாய்சுந்தரம், சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபுமுருகவேல் ஆகியோர் அடங்கிய சட்ட ஆலோசனை குழு அமைப்பு.

* இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு.

* தமிழகம் முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவு…

💥 மாமன்னர் இராசராச சோழனால் ஏற்படுத்தப்பட்ட தஞ்சை சமுத்திரம் ஏரி ₹8 கோடியில் புனரமைப்பு
பூங்கா, படகு சவாரி ஏற்படுத்த திட்டம்.

💥 ஆப்கன் அரசில் தாலிபான்களுக்கு அதிகாரப் பகிர்வு!

ஆப்கானிஸ்தானில் நிலவும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர தலிபான்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க ஆப்கன் அரசு முடிவு

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் பேச்சில் தலிபான்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கும் ஒப்பந்தத்தை ஆப்கன் அரசு முன்வைத்துள்ளது.

* உடல்நலக் குறைவு காரணமாக புகழ்பெற்ற நெடுந்தொடர் நடிகர் காளிதாஸ் காலமானார்

💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

1,892 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 33 பேர் உயிரிழப்பு; தற்போது 20,399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages