தமிழக சட்டப்பேரவையில் இன்று (13.08.2021) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரை:
கொரோனா 2ம் அலை கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய அளவில் தாக்கியது; கொரோனா பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் இந்த பட்ஜெட் உரையில் உள்ளன.
மத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை பெற நிபுணர் குழு அமைக்கப்படும்.
பெட்ரோல், டீசல் வரி உயர்வால் மத்திய அரசுக்கு 69% வருவாய் அதிகரித்துள்ளது.
மாநிலங்களுக்கு குறைந்த அளவே வரி வருவாய் பிரித்து அளிக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
பொது நிலங்கள் மேலாண்மைக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.
அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி கலைஞர் செம்மொழி தமிழ் விருது ₹10 லட்சம் பரிசுடன் வழங்கப்படும்.
கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ₹5 கோடி நிதி ஒதுக்கீடு.
கீழடியில் திறந்தவெளி கண்காட்சி அமைக்கப்படும்; கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ₹80 கோடியும், தொல்லியல் துறைக்கு ₹29 கோடியும் ஒதுக்கீடு.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ₹4,807 கோடி நிதி ஒதுக்கீடு.
தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது; இத்திட்டத்தை செயல்படுத்த ₹500 கோடி வரை நிதி ஒதுக்கீடு.
காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
காவல்துறைக்கு ₹8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும்; இதற்காக ₹433 கோடி ஒதுக்கீடு.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ₹150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ₹500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ₹6,607 கோடி நிதி ஒதுக்கீடு.
மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்.
நீதித்துறைக்கு ₹1713 கோடி ஒதுக்கீடு; பேரிடர் மேலாண்மை துறைக்கு ₹1,360 கோடி ஒதுக்கீடு.
காவல்துறைக்கு ₹8,930.29 கோடி; சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ₹4,807 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ₹80 கோடி, தொல்லியல் துறைக்கு ₹29 கோடி ஒதுக்கீடு.
நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.
தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.
79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ₹3 கோடி மீண்டும் அளிக்கப்படும்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்.
சென்னையில் பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்; சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.
1000 புதிய பேருந்துகள் வாங்க ₹623.59 கோடி நிதி ஒதுக்கீடு.
10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதியேற்றுள்ளது.
புதிதாக பெருநகர வளர்ச்சி குழுமங்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஓசூரில் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ₹3,954 கோடி ஒதுக்கீடு.
திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அமைக்கப்படும்.
உயிரியல் அகழ்ந்தெடுப்பு முறையில் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு மீட்டெடுக்கப்படும்.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்த ₹87 கோடி செலவில் திட்டம்.
BREAKING:
பெட்ரோல் மீதான தமிழ்நாடு மாநில அரசின் வரி ரூ 3 குறைப்பு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்கவே.
நிலங்களுக்கான வில்லங்ச் சான்றிதலை 1975ம் ஆண்டு வரை இணையம் மூலம் சரிபார்க்கலாம் என்ற வசதியை 1950ம் ஆண்டு வரை சரிபார்க்கலாம் என விரிவுபடுத்தப்படும்.
கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு அரசு, உள்ளாட்சி அமைப்புகள் பணம் செலுத்தும் வங்கிகளாக மாற்றம் செய்யப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான நிதி ரூ.225.62 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் மதிய உணவு திட்டத்திற்கு ₹1,725 கோடி ஒதுக்கீடு.
கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு.
திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ₹1.50 கோடி ஒதுக்கீடு.
பழனி தண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.
மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு.
போதிய நிதி வசதி இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் ₹130 கோடி நிதி ஏற்படுத்தப்படும்.
மாநிலத்தின் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களிலும் டைடல் பார்க் ஏற்படுத்தப்படும்; முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் டைடல் பார்க் உருவாக்கப்படும்.
திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
உயர் கல்விக்காக ₹5,369.09 கோடி ஒதுக்கீடு; ஆளில்லா விமான கழகமானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும்.
உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51.4% ஆக உள்ளது; 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
865 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ₹20 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும்.
பள்ளிக்கல்வித் துறைக்கு ₹32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு.
ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது; தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது.
மின் கட்டணம் - ஓர் பார்வை!
தமிழகத்தில் மொத்தம் 1.75 கோடி வீட்டு உபயோக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளில் 2 மாதங்களில் 100 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தியிருந்தால் அதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. 100 யூனிட்டில் இருந்து 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
200 யூனிட்டில் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2-ம், 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.3-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவே 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50-ம், 201 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ம், 500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.என இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment