அக்னிப்புரட்சி இன்றைய (14.08.2021) முக்கிய செய்திகள்.
* புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரத்தில் குற்றச்சாட்டு கொடுக்கச் சென்ற ஒரு முதியவரை காவலர்கள் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. (🔴 Attention: Beep போடவில்லை🔴)
💥 தமிழக அரசின் வரி குறைப்பு காரணமாக சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.02 குறைந்து ரூ 99.47 ஆகவும், டீசல் விலையில் கடந்த 28 நாட்களாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ 94.39 ஆக மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.
💥அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!
அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குகிறார் முதல்வர் முக ஸ்டாலின்.
"அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என்ற திட்டத்தின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
29 ஓதுவார்கள் உள்பட 158 கோயில் பணியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர்.
* சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை:
ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது; முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம்தான் கேட்டது, அந்த சத்தம் நிம்மதியாக இருக்கவிடவில்லை, லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும், அரவணைப்பாக இருந்ததும்தான் பெரிய சாதனையாக கருதுகிறேன்.
100 நாள் ஆட்சியில் சிறந்த பெயரை பெற்றுள்ளோம்; அதனை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும்; திமுக ஆட்சி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாட்களாக இந்த 100 நாட்கள் அமைந்துள்ளது.
வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என ஏமாற்ற தயாரில்லை; வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம், நிறைவேற்றுவோம்.
வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்து வரும் நாட்களில் 2 மடங்காக உழைப்போம்- சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.
* அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை:
திமுக ஆட்சியின் 100 நாட்கள் நிறைவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
* 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி கானல் நீரா?
சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதுதான் திமுகவின் வாடிக்கை
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடல்
* அனைத்து பிரிவினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு
* உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 3 ஆட்சியர்களுக்கு முதல்வர் விருது வழங்கினார்.
தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆட்சியர்களுக்கு விருது வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
* பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் நடிகை மீரா மிதுன் கைது.
கேரளாவில் கைதான மீரா மிதுனை சென்னை அழைத்து வருகிறது சைபர் கிரைம் போலீஸ்.
💥 ஆப்கானித்தானில் தாலிபான் படைகள் பல மாகாணங்களை கைப்பற்றி முன்னேறி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் அசுரப் காணி பதவி விலக மறுப்பு தெரிவித்து அறிவிப்பு
நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாடு அளவில் பேச்சுகள் நடைபெறுகிறது.
இதன் முடிவுகளை மிக விரைவில் பொது மக்களுக்கு பகிரப்படும்.
தற்போதைய முதன்மை பணியாக படைகளை இடமாற்றுவது ஆகும்
ஆப்கன் அதிபர் நாட்டு மக்களுக்கு உரை
💥பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது
தன்னை தமிழக காவல்துறையினர் கொடுமை செய்வதாக, கைது செய்யப்படுவதற்கு முன்னர் மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ
* ஆப்கன் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பாக இந்தியா ஏற்பாடுகள் செய்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்
💥 தமிழகத்தில் மேலும் 1,916 பேருக்கு கொரோனா தொற்று; கடந்த 24 மணி நேரத்தில் 1,866 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்: 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
💥 மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சோ்ப்போருக்கு, தகைசால் தமிழா் விருது அளிக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அந்த விருது நிகழாண்டில் முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு அளிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். விருதை தொடர்ந்து ரூ.10 லட்சத்திற்கான கசோலையையும் அவர் வழங்கினார்.
No comments:
Post a Comment