நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா இன்று கோலாகல கொண்டாட்டம். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பின் பிரதமர் மோடி உரை:
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை.
டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் மோடி:
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
தேசியக்கொடி ஏற்றிய பின் பிரதமர் மோடி உரை:
காந்தி, நேதாஜி, உள்ளிட்ட தலைவர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம்; நேரு, அம்பேத்கர் உள்ளிட்டோரின் அரும்பணிகளையும் நினைவுகூர்வோம்.
சுதந்திர தினத்தில் கொரோனாவுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் என அனைவருக்கும் வணக்கங்கள்.
ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட நமது விளையாட்டு வீரர்களை பாராட்டுவோம்; சிறப்பாக விளையாடிய அவர்கள், தேசத்தின் பெருமையை ஒலிம்பிக்கில் நிலைநாட்டினர்.
கொரோனா மனித குலத்திற்கு மிகப்பெரும் சவாலாக மாறியது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்பது பெருமைக்குரியது.
நாட்டில் இதுவரை 54 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவினுடையது.
ரயில்வே, நீர்வழி போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன; சிறு நகரங்களை இணைக்கும் வகையில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையங்கள் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன.
விவசாயத்தில் புதுமையை புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; அடுத்த தலைமுறையினருக்கு கட்டமைப்புகளை ஏற்படுத்த உழைத்து கொண்டிருக்கிறோம்.
விவசாயிகள் நலனுக்காக விளை பொருட்களை சேமித்து வைக்க ஏதுவாக கிராமங்கள் தோறும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
நமது கிராமத்து விவசாயிகளின் விளை பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது; விவசாயிகள் நலனுக்காக 1.5 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நாம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்; அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் உள்ளது, புதிய இந்தியாவை சிறப்பாக கட்டமைக்க கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது.
நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது; கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை.
நாம் கைபேசிகளை இறக்குமதி செய்த நிலை போய், தற்போது 3 பில்லியன் கைபேசிகளை ஏற்றுமதி செய்கிறோம்; நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்ததாகவும், உலக தரத்துக்கு இணையாகவும் இருக்க வேண்டும்- செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பின் பிரதமர் மோடி உரை.
ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி மரியாதை:
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றிய உடன் ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்பட்டது.
விமானப்படைக்கு சொந்தமான 2 MI17 ஹெலிகாப்டர்கள் வானில் இருந்தபடி மலர்தூவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் தேசியக் கொடியை ஏற்றும் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவது இதுவே முதல்முறை.
No comments:
Post a Comment