அக்னிப்புரட்சி இன்றைய (19.08.3031) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.47 க்கும், டீசல் விலை 18 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.94.02 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
💥 2021 தேசிய நல்லாசியர்களுக்கான விருது
தமிழகத்தைச் சேர்ந்த ஆஷா தேவி (திருச்சி) மற்றும் லலிதா (ஈரோடு) ஆகிய இரு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது
* 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 12 நகராட்சி பொறியாளர்கள் பணியிட மாற்றம்
* 2021-22 ஆண்டுக்கான RTE- 2009ன்படி 25% இட ஒதுக்கீட்டில் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்யும் பணி இன்று அந்தந்த பள்ளிகளில் நடைபெற உள்ளது.
💥 மருத்துவ படிப்புகளில் இந்திய அளவிலான ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆகஸ்ட் 25ல் தீர்ப்பு
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பாதிப்பில்லை என நடுவண் அரசு தரப்பில் விளக்கம்
💥 சட்டப்பேரவை நிகழ்வுகளை இன்று புறக்கணிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு
கொடநாடு விவகாரம் தொடர்பாக கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு
💥 பெட்டி பெட்டியாக பணத்துடன் செல்லவில்லை : முன்னாள் ஆப்கன் அதிபர் அஷரப் கானி வீடியோ வெளியீடு
காபூலில் பேரழிவு நிகழக் கூடாது என்பதால் நாட்டை விட்டு வெளியேறினேன் மீண்டும் ஆப்கன் திரும்பி நாட்டின் இறையாண்மைக்காக போராடுவேன். - : அஷரப் கானி
💥 அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் என சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
அவர்களாக வெளியேறியதை நாங்கள் வெளியேற்றியதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.
இத்தகைய செய்திகளில் பத்திரிகைகள் கவனம் செலுத்த வேண்டும் - சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடவில்லை - சபாநாயகர் அப்பாவு.
அதிமுக உறுப்பினர்கள் நேற்று தாமாகவே வெளியேறினார் எனவும் சபாநாயகர் விளக்கம்.
மக்கள் பிரச்சினைகளை பேசும் அவையில் தனிப்பட்ட பிரச்சினைகளை எழுப்பக்கூடாது.
அனுமதி பெறாமல் அதிமுக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி கூச்சல் எழுப்பினர் - சபாநாயகர் அப்பாவு.
💥 அமெரிக்க ராணுவ தகவல்கள் - தாலிபான்கள் வசமானது.
அமெரிக்க ராணுவத்தினர் தகவல் தொகுப்பை கைப்பற்றியது தாலிபான் அமைப்பு.
ராணுவத்தினருக்கு உதவிய ஆப்கானியர்கள் பழி வாங்கப்படலாம் என அச்சம்.
💥 மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும்.
இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு.
* பெட்ரோல் விலை குறைப்பால் மக்கள் நேரடியாக பயன் அடைந்துள்ளனர்.
ஆக. 1 - 13 தேதியில் சராசரி ஒருநாள் பெட்ரோல் விற்பனை 9,180 கிலோ லிட்டர், அதுவே 14 - 17ம் தேதி வரை 4 நாட்களில் 10,317 கிலோ லிட்டர் விற்பனையாகியுள்ளது - சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பேச்சு.
💥 சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
தமிழ் தொடர்பான ஆவணங்கள், கல்வெட்டுகள் போன்ற அனைத்தையும் சென்னைக்கு 6 மாதத்திற்குள் மாற்ற வேண்டும்.
தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும்.
சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து தர வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
💥 கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.182 கோடி உடனடியாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.
மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த 10 மாவட்டங்களில் ஹெக்டருக்கு ரூ.2000 என பாதிப்பு ஏற்பட்டுள்ள மொத்த நிலங்களுக்கும் சேர்த்து ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் பயிரிடப்படும் மத்தி வாழைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் - வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதில்.
💥 சென்னை, கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் சந்திப்பு.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆளுநரிடம் மனு.
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு.
ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தது தான் திமுக அரசின் 100 நாள் சாதனை - ஈபிஎஸ்.
100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படவில்லை, திமுக அரசு முடக்கியுள்ளது.
கொடநாட்டில் அவ்வப்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுப்பது வழக்கம்.
கொடநாடு வழக்கில் கைதானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளது திமுக அரசு.
நீட் வழக்கில் பொய்யான கருத்தை மக்களிடம் கூறியுள்ளது திமுக.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறார்கள்.
எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வேண்டுமென்றே வழக்கு போட்டுள்ளனர்.
திமுகவின் 100 நாள் ஆட்சியில் மக்கள் வேதனையும், சோதனையும் தான் அடைந்துள்ளனர்;
அதிமுக ஆட்சியில் துவங்கிய திட்டங்கள் வேண்டும் என்றே முடக்கி உள்ளனர்- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
💥 முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்.
தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, விதிமுறைகளை பின்பற்றாமல் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு.
இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது.
* அம்மா உப்பு இனி அரசு உப்பு" என பெயர் மாற்றம் செய்து விற்கப்படுகிறது
💥 திமுக அரசு நிர்வாக அளவில் தோல்வியடைந்துவிட்டதாக ஆளுநரிடம் அதிமுக குற்றச்சாட்டு
Corruption, Collection, Vendetta ஆகிய சொற்களை முன்னிலைப்படுத்தி குற்றச்சாட்டு
இந்த திமுக அரசின் நோக்கம் Corruption, Collection, Vendetta. தமிழக மக்களுக்கு கடந்த 100 நாட்களில் சாதனை அல்ல, சோதனை தான் அதிகம் - சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
* தமிழ் நாட்டில் தளர்வுகளற்ற ஊரங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக அரசு உயர் அலுவலர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் நாளை கலந்தாய்வு மேற்கொள்கிறார்
💥 ஹைதி நிலநடுக்கம் உயிரிழப்பு எண்ணிக்கை 2189 ஆக அதிகரிப்பு
💥திமுகவின் 13 அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை விரைவாக முடித்து வைப்பதில் திமுக முனைப்பாக உள்ளது ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
💥 இந்தியாவில் இதுவரை 50 கோடி கொரோனா வெருவி கண்டறியும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு
* அவையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப் படவில்லை: பேரவைத்தலைவர் அப்பாவு
அதிமுகவினர் அவையிலிருந்து அவர்களாகத்தான் வெளியேறினர். நான் வெளியேற்ற ஆணையிடவில்லை. ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது கவனமாக வெளியிட வேண்டும்
- : பேரவைத்தலைவர்
* புளியந்தோப்பு குடியிருப்பில் மக்கள் குடியேற அரசு அனுமதி தரவில்லை
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
* எதிர்க்கட்சியாக இருந்த போது நான் சுட்டிக்காட்டிய பிரச்னைகள், நான் ஆளுங்கட்சி அமைச்சரான பிறகும் தீர்க்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது
கடந்த 10 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள், அதில் செயல்படுத்தப்பட்ட அறிவிப்புகள் எவை எவை ? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஆய்வு செய்து இந்த கூட்டத்தொடரிலேயே அறிக்கை வெளியிடப்படும்
: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
💥நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நடுவண் அரசுக்கு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு நடுவண் அரசு ஆங்கிலத்துலேயே பதில் எழுத வேண்டும்
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை
💥சென்னை புளியந்தோப்பு தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம்
அப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பேச்சு
💥 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரங்கள் வரும் 21-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியீடு
: தேர்வுத்துறை அறிவிப்பு
* மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% உள் இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்க முடியாது - :உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை
💥 அரசு வழங்கும் இடஒதுக்கீடு என்பது அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் கோர முடியாது- உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு அரசு உதவிபெறும் பள்ளிக்கும் வழங்கக்கோரிய மனு.
வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு ஆணை.
No comments:
Post a Comment