மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய திருநாளான திருவோணம் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். - Agnipuratchi

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய திருநாளான திருவோணம் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

Share This

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய திருநாளான திருவோணம் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

மன்னன் மகாபலியின் வரலாறு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி,  கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் கொடைவள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதே போல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த  விஷ்ணு, மூன்றாம் அடியை வாமணன் காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம்  திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணம் திருநாள் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. அந்த 10 நாட்களும் மலையாள மக்களின் வீடுகள் முன் விதவிதமான மலர்களால் பூக்கோலம் போடப்படுவது வழக்கமாகும். திருவோணம் நாளில் 64 வகை உணவுகளுடன் விருந்து படைக்கப்படுகிறது. ஆலயங்களில் வழிபாடு, கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், நீரிலும், நிலத்திலும் பல வகையான விளையாட்டுப் போட்டிகள் என விழா களை கட்டும்.

ஓணம் திருநாள் மகிழ்ச்சியின் வெளிப்பாடு... ஓணம் திருநாள் கொண்டாட்டத்திற்கான களம். ஓணம் திருநாளின் சிறப்புகளையும், பெருமைகளையும் சங்க இலக்கியங்கள் விரிவாக விளக்கியுள்ளன. ஓணம் திருநாள் மக்களுக்கு  சொல்லும் செய்தி என்பது அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்தும் வாழ வேண்டும் என்பது தான். அந்த செய்தியை மதித்து, ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages